முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மகன் ஐஸ்க்ரீம் - ஜூஸ் விற்று ரூ.7.5 லட்சம் சம்பாதித்தார் - ருசிகரமான தகவல்கள்

ஞாயிற்றுக்கிழமை, 16 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் :  தெலுங்கானா முதல்வரின் மகனும், கேபினட் அமைச்சருமான கே.டி. ராமா ராவ் இரண்டு மணிநேரம் ஐஸ்க்ரீம் விற்று ரூ. 7.5 லட்சம் சம்பாதித்துள்ளார்.
தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் கூட்டத்திற்கு நிதி திரட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் குறைந்தது இரண்டு நாட்களுக்கு கூலி வேலை செய்ய வேண்டும் என்று கட்சியின் தலைவரும், தெலுங்கானா மாநில முதல்வருமான கே. சந்திரசேகர்ராவ் அறிவித்தார்.இதையடுத்து கே. சந்திரசேகர் ராவின் மகனும், கேபினட் அமைச்சருமான கே.டி. ராமா ராவ் கூலி வேலைக்கு செல்ல முடிவு செய்தார்.

ஐஸ் க்ரீம் பார்லர்

ஐதராபாத்தில் உள்ள குதுபுல்லாபூரில் இருக்கும் ஐஸ் க்ரீம் பார்லரில் கூலி வேலைக்கு சென்றார் கே.டி. ராமா ராவ். அவர் ஐஸ் க்ரீம் விற்க வந்துள்ளதை அறிந்து அரசியல் தலைவர்கள் அந்த கடையில் குவிந்தனர்.

கே.டி. ராமா ராவ் இரண்டு மணிநேரம் ஐஸ்க்ரீம் விற்பனை செய்து ரூ. 6 லட்சம் சம்பாதித்தார். தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி எம்.பி. மல்லா ரெட்டி ஒரு ஐஸ்க்ரீமை ரூ. 5 லட்சத்திற்கு வாங்கினார். அதே கட்சியை சேர்ந்த மற்றொரு தலைவரான ஸ்ரீனிவாஸ் ரெட்டி ரூ. 1 லட்சம் கொடுத்து ஐஸ்க்ரீம் வாங்கினார்.

ஐஸ்க்ரீம் கடையை அடுத்து ஜூஸ் கடைக்கு வேலைக்கு சென்றார் கே.டி. ராமா ராவ். ஜூஸ் கடையில் அவர் ரூ. 1.30 லட்சம் சம்பாதித்துள்ளார். அங்கும் அரசியல் தலைவர்களால் தான் வியாபாரம் நடந்துள்ளது.

கட்சி துவங்கப்பட்ட நாளை கொண்டாடும் விதமாக வரும் 27ம் தேதி வாரங்கலில் நடக்கும் கூட்டத்திற்காகத்தான்  இப்படி கூலி வேலை செய்து சம்பாதிக்கிறார்களாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்