திருச்சி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 519 மனுக்கள் பெறப்பட்டது : மாவட்ட வருவாய் அலுவலர் தர்ப்பகராஜ் தகவல்

திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2017      திருச்சி

திருச்சி மாவட்டத்தில் நேற்று (17.04.2017) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 519 மனுக்கள் பெறப்பட்டது என மாவட்ட வருவாய் அலுவலர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

 

கூட்டம்

 

மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் மனுக்களை அளித்தனர்.


குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா ஆக்கிரமிப்பு அகற்றக்கோரியது, பட்டா மாறுதல், சாதிச்சான்றுகள், இதர சான்றுகள் மற்றும் நிலம் தொடர்பான 209 மனுக்களும், குடும்ப அட்டை தொடர்பான 16 மனுக்களும், முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்ட மற்றும் விதவை உதவித்தொகை கோரி 45 மனுக்களும், சத்துணவு அமைப்பாளர் மற்றும் வேலைவாய்ப்பு கோரியது தொடர்பான 27 மனுக்களும், ரோடு, தெருவிளக்கு, தண்ணீர் இணைப்புகுழாய், பஸ் வசதி, தொகுப்பு வீடு மற்றும் இதர அடிப்படை வசதிகள் கோரி 19 மனுக்களும், புகார் தொடர்பான 17 மனுக்களும், கல்வி உதவித்தொகை வங்கிக்கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோரி 03 மனுக்களும், திருமண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், சலவைப் பெட்டி தொடர்பான 10 மனுக்களும், பென்சன், நிலுவைத்தொகை கேட்டல் மற்றும் ஓய்வூதிய பயன்கள் மற்றும் தொழிலாளர் நலவாரியம் தொடர்பான 05 மனுக்களும் மற்றும 168 இதர மனுக்கள் என மொத்தம் 519 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: