ஆரல்வாய்மொழியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் வழங்கினார்

திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2017      கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்குட்பட்ட வருவாய் கிராமம் ஆரல் குமாரபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கலெக்டர் அவர்களின் இரண்டாம் கட்ட மனுநீதி நாள் முகாம் நிறைவுநாள் நிகழ்ச்சி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   தலைமையில் நடைபெற்றது. 09.03.2017 அன்று நடைபெற்ற முதற்கட்ட முகாமில் 28 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.  இதில் 9 தகுதியான மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  இந்த மனுக்கள் மீதான பதில்களை கலெக்டர்  முன்னிலையில், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் பொது மக்களுக்கு பதில்கள் தெரிவிக்கப்பட்டது.  அதனை தொடர்ந்து, வருவாய்த்துறை சமூகபாதுகாப்பு திட்டத்தின்கீழ், இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை என மொத்தம் 10 நபர்களுக்கு மாதந்தோறும் தலா ரூ. 1,000ஃ- பெறுவதற்கான ஆணைகளையும்,    8 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக ஒரு பயனாளிக்கு இலவச தேய்ப்புபெட்டியும், வேளாண்மைத்துறை சார்பாக   ஒரு பயனாளிக்கு வேளாண் இடுபொருள் என மொத்தம் 20 பயனாளிகளுக்கு தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்  வழங்கினார்.  முன்னதாக, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை,, வேளாண் விற்பனைத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்ட வழங்கல் துறை ஆகிய துறைகளின் மூலம், தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து விளக்கவுரையாற்றினார்கள். மேலும், தோட்டக்கலை துறை மற்றும் வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் விற்பனைத்துறை மூலம் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை கலெக்டர்  பார்வையிட்டார். நிகழ்ச்சியில் நாகர்கோவில் கோட்டாட்சியர்  ஆர். ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)  நிஜாமுதீன், இணை இயக்குநர் (வேளாண்மைதுறை)  இளங்கோ, சமூக பாதுகாப்புத்திட்டம் தனி துணை ஆட்சியர் சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர்  சின்னம்மாள், வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர்  சுனில் ஜோஸ்,     மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுலவர்  சிவகாமி, தோட்டக்கலைதுறை உதவி இயக்குநர்  அப்பலோஸ், தோவாளை வட்டாட்சியர்                          சாரதாமணி, சமூகநல பாதுகாப்புத்திட்ட தனி வட்டாட்சியர்;  மூர்த்தி, ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர்  ரெத்தினம், மண்டல துணை வட்டாட்சியர்  மரியஸ்டெல்லா உள்ளிட்ட அரசு அலுவலர்கள்; கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: