அரியலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2017      அரியலூர்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், திங்கட்கிழமை "மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்" மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், தலைமையில் நேற்று (17.04.2017) நடைபெற்றது.

 

பட்டா

 

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 1900 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.


மேலும், வருவாய் துறையின் மூலம் முதலமைச்சர் சாலை விபத்து நிவாரண நிதியின் கீழ் உடையார்பாளையம் வருவாய் கோட்டத்தைச் சார்ந்த 14 பயனாளிகளுக்கு ரூ.4 இலட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான காசோலையினையும், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் எதிர்பாரா நிகழ்வால் மாணவர்களுக்கு ஏற்படும் சிறு காயங்களுக்கு உடனடி சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 25 ஆதிதிராவிடர் நல பள்ளிகளுக்கு தலா ரூ.2650ஃ- வீதம் மொத்தம் ரூ.66,250- மதிப்பில் முதலுதவி பெட்டிகளை மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன், துணை கலெக்டர் (சமூகபாதுகாப்புத்திட்டம்) பாலாஜி, துணை கலெக்டர் (நிலம்) சீனிவாசன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஹேமலதா, கோட்டாட்சியர் உடையார்பாளையம் டினாகுமாரி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: