முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்பந்தயம்: ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் முதலிடம்

திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2017      விளையாட்டு
Image Unavailable

சகிர் : பக்ரைன் கிராண்ட்பிரி சகிர் ஓடுதளத்தில் நடந்த 3-வது சுற்று போட்டியில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 1 மணி 33 நிமிடம் 53.374 வினாடிகளில் இலக்கை கடந்து, முதலிடத்திற்குரிய 25 புள்ளிகளை பெற்றார்.

20 சுற்றுகள்

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 3-வது சுற்றான பக்ரைன் கிராண்ட்பிரி சகிர் ஓடுதளத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. பந்தய தூரம் 308.238 கிலோ மீட்டர் ஆகும். வழக்கம் போல் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் மின்னல் வேகத்தில் பாய்ந்தனர்.

வெட்டல் முதலிடம்

முன்னாள் சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 1 மணி 33 நிமிடம் 53.374 வினாடிகளில் இலக்கை கடந்து, முதலிடத்திற்குரிய 25 புள்ளிகளை பெற்றார். அவரை விட 6.6 வினாடி மட்டுமே பின்தங்கிய இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் 2-வதாகவும் (மெர்சிடஸ் அணி), முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 3-வதாகவும் வந்தனர்.

4-வது சுற்று

போர்ஸ் இந்தியா அணிக்காக பங்கேற்று வரும் செர்ஜியோ பெரேஸ் (மெக்சிகோ) 7-வது இடத்தையும், ஈஸ்ட்பான் ஒகான் (பிரான்ஸ்) 10-வது இடத்தையும் பிடித்தனர். இதுவரை நடந்த 3 சுற்று முடிவில் வெட்டல் 68 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஹாமில்டன் 61 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் இருக்கிறார்கள். 4-வது சுற்று போட்டி ரஷியாவில் வருகிற 30-ம் தேதி நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்