முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் பன்முகத்தன்மையை கொண்டாட வேண்டும்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வேண்டுகோள்

திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

பாட்னா, நாட்டின் ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக அதன் பன்முகத்தன்மையை கொண்டாட வேண்டும் என்று மக்களை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கேட்டுக்கொண்டார்.

பீகார் மாநிலத்தில் உள்ள சம்பரான் என்ற இடத்தில் மகாத்மாக காந்தி சத்தியாகிரக போராட்டம் நடத்திய நூற்றாண்டு தினத்தையொட்டி சுதந்திரப்போராட்ட வீரர்களை கவரவிக்கும் வகையில் மாநில தலைநகர் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பிரணாப் பேசியதாவது:-

பன்முகத்தன்மை:-

நாட்டின் ஐக்கியத்தையும் பன்முகத்தன்மையையும் கட்டிக்காத்து பாதுகாக்கும் வகையில் அதன் பன்முகத்தன்மையை மக்கள் கொண்டாட வேண்டும். இந்தியாவை 190 ஆண்டுகள் பிரிட்டீஷார் ஆட்சி செய்தனர். அது நாட்டின் இருண்ட காலமாகும். தற்போது நாம் உள்நாட்டிலேயே வகுப்புவாதம் மற்றும் அனைத்து வகையான அநீதிகளையும் எதிர்த்து போராட வேண்டும்.
இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறும் நாடாக இருக்கிறது. உலக அளவில் பொருளாரதாரத்தில் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருக்கிறது. இதற்குக்காரணம் இந்திய விவசாயிகளின் கடின உழைப்பு, நிலத்தில் விவசாய தொழிலாளர்களின் உழைப்பு, ஆய்வுக்கூடங்களில் விஞ்ஞானிகளின் ஆய்வு ஆகியவைகள்தான் காரணமாகும்.

சுரண்டல்:-

பிரிட்டீஷாரின் 190 ஆண்டுகால ஆட்சி நாட்டின் இருண்ட காலமாக இருந்ததோடு நாட்டில் உள்ள அனைத்து வளங்களும் சுரண்டப்பட்டன என்பதுதான் வரலாறு. அதனால்தான் காலனி ஆதிக்கம், துயரங்கள், துன்பங்களை எதிர்த்து நாம் போராட வேண்டியிருந்தது. தற்போது உள்நாட்டில் நாம் வகுப்புவாதம், மதவாதம், பிரிவினைவாதம், அனைத்துவகை அநீதிகளையும் நாம் எதிர்த்து போராட வேண்டும்.
இந்தியர்களின் மனநிலையில் ஒரு அற்புதமான நிலை உள்ளது. அதனால்தான் இந்தியாவில் பன்முகத்தன்மை இருந்தபோதிலும் ஐக்கியமாகவும் ஒருமைப்பாட்டுடனும் இருக்கிறது. இந்தியாவில் தற்போது 130 கோடி பேர் வாழ்கிறார்கள். இங்கு 6 பெரிய மதங்கள் பெருமளவில் பின்பற்றப்படுகிறது. இவ்வாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago