முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் பிரம்மாண்டமான   ஜி  'ஸ்டுடியோவை' கமல் ஹாசன்  திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2017      சென்னை

கலை நயத்தோடு மிக பிரம்மாண்டமாக சென்னையில் உருவாக்கப்பட்டிருக்கும் 'ஸ்டுடியோவை' கமல் ஹாசன் திறந்து வைத்தார்

திறப்பு விழா

தமிழ் திரையுலகின் முதகெலும்பாய் செயல்பட்டு வந்த பல ஸ்டுடியோக்கள் கால போக்கில் மெதுவாக மறைந்து விட்டாலும், தற்போது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வேலப்பன் சாவடியில் நிறுவப்பட்டிருக்கும் பிரமாண்டமான ஜி - ஸ்டுடியோ தமிழ் திரையுலகிற்கு புத்துயிர் அளித்திருக்கின்றது. இந்த ஸ்டுடியோவை நேற்று பல திரையுலக பிரமுகர்கள் முன்னிலையில் கமல் ஹாசன் திறந்து வைத்தார். உலக தரத்தில் மிக பிரம்மாண்டமாக நிறுவப்பட்டிருக்கும் இந்த ஸ்டுடியோ, சென்னை மாநகரத்திற்கு புதியதொரு அடையாளத்தை பெற்று தந்திருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லலாம். இசைஞானி இளையராஜா குத்து விளக்கு ஏற்றி, சர்வேதச திரையுலகின் கவனத்தை ஈர்க்கும் இது போன்ற ஸ்டுடியோக்களின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்து கூறினார். கோகுலம் குழுமத்தின் நிறுவனர் திரு கோபாலன் அவர்களோடு இணைந்து பணியாற்றிய அனுபவங்களை பற்றியும் இந்த விழாவில் கமல் ஹாசன் பேசியது குறிப்பிடத்தக்கது. "எனது இல்லத்திற்கு பிறகு நான் அதிகமாக வாழ்ந்த இடம் ஸ்டுடியோக்கள் தான். தென் திரையுலகின் பெருமைக்குரிய பல ஸ்டுடியோக்கள் மூட பட்டதை கேள்விப்பட்டு நான் மிகவும் மன வேதனை அடைந்தேன். திரையுலகிற்கு கோபாலன் செய்திருக்கும் இத்தகைய அர்ப்பணிப்பை 'தர்மா' என்று தான் நான் சொல்லுவேன். ஒரு காலத்தில் எப்படி ஆற்காடு சாலை ஸ்டுடியோக்களின் அடையாளமாக திகழ்ந்ததோ, அதே போல் இந்த ஜி - ஸ்டுடியோ மூலம் விரைவில் பூந்தமல்லி நெடுஞ்சாலையும் தமிழ் சினிமாவின் மையமாக திகழும். வர்த்தகம் என்பதை தாண்டி சினிமா மீது காதல் இருந்தால் தான் இத்தகைய பிரம்மாண்ட ஸ்டுடியோவை திரையுலகிற்கு அர்ப்பணிக்க முடியும்" என்று பெருமையாக கமல் ஹாசன்கூறினார். இந்தவிழாவில் நடிகர் சங்கத்தின் பொது செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான விஷால் பெப்பிசி தலைவர் ஆர் கே செல்வமணி, தென் இந்திய பிலிம் சேம்பேர் தலைவர் எல் சுரேஷ் இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன்,  (Secretary of the SICA), கண்ணன்,கலை இயக்குனர் சங்கத்தின் தலைவர் சண்முகம்அங்கமுத்து கலை இயக்குநர் சாபு சிரில், and மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்