முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிஎஸ்ஐ பள்ளிக்கு ரூ3லட்ச மதிப்பு கணினி: சென்னை பேராயரிடம் ரோட்டரி சங்கம் வழங்கியது

திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2017      வேலூர்
Image Unavailable

அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ மேனிலைப்பள்ளிக்கு ரூ3 லட்சம் மதிப்புடைய 10 கணினிகளை ரோட்டரி சங்கமும், போர்டு மோட்டார் நிறுவனமும் இணைந்து சென்னை பேராயரிடம் வழங்கியது. வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரம், பழைய பேருந்து நிலையம் அருகில் அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ பெண்கள் மேனிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு ரூ3 லட்சம் மதிப்புடைய கணினிகள் வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது. ரோட்டரி தலைவர் கே.பி.கே.பிரபாகரன் நிகழ்விற்கு தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.ஆர்.கென்னடி வரவேற்று பேசினார் ரோட்டரி செயலாளர் ஜெ.சிவக்குமார், தொழிற் கல்வி இயக்குனர் எஸ்.செல்வம், எழுத்தறிவு இயக்குனர் அருணா.வடிவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ரோட்டரி சங்க புறநகர் மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார் கலந்து கொண்டு பேசிய போது தென்னிந்திய மக்களின் நோய் நொடிகளை போக்க மருத்துவமனைகளையும், மாணவர்காள் கல்வி அறிவு பள்ளிகளையும் அரசு ஏற்பாடு செய்யும் முன்பே உங்களை போன்ற கிறிஸ்துவ மக்கள் ஈடுபட்டனர். அவர்களின் பணி பாராட்ட ரோட்டரி சங்கம் என்றும் கடமை பட்டு உள்ளது. அதுபோல் உங்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக நாங்களும் இருப்போம்; என்று பாராட்டி பேசிய பின் சென்னை போர்டு நிறுவனம் வழங்கும் ரூ3 லட்சம் மதிப்புடைய பத்து கணினிகளை தென்னிந்திய பேராயர் ஜெபராஜ் ஜார்ஜ் ஸ்டீபனிடம் வழங்கினார். அப்போழுது யமுணா ஜெபராஜ், குருசேகர ஆயர், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் உதவி தலைமை ஆசிரியர் மைக்கேல் நன்றி கூறினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்