முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈஸ்டர் பண்டிகை: நாசரேத் பகுதி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை

திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2017      தூத்துக்குடி

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நாசரேத் பகுதியிலுள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடந்தது.ஏசுவின் சிலுவைப் பாடுகளை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கி ஈஸ்டர் பண்டிகையுடன் நிறைவடைந்தது. இயேசு இந்த உலகில் வாழ்ந்த காலத்தில் சிலுவையில் அறையப்படுவதற்கு முன் எருசலேம் வீதிகளில் கழுதை மீது ஏறி எருசலேம் மக்களால் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அப்போது குருத்தோலை மற்றும் மரக்கிளைகளை பிடித்து அவரை வரவேற்றனர். அதை நினைவு கூறும் வகையில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. இந்த உலகில் வாழ்ந்த கடைசி காலத்தில் இயேசு தனது சீடர்களுடன் மேல்வீட்டின் அறையில் இராப்போஜனம் உட்கொண்டார். இதை தாம் திரும்ப வருமளவும் கடைபிடிக்குமாறு தன்னுடைய சீடர்களுக்கு கட்டளையிட்டு சென்றதை நினைவு கூறும் விதமாக கட்டளை வியாழன் அனுசரிக்கப்பட்டது. 14-ஆம் தேதி பெரிய வெள்ளிக்கிழமையாக அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் மும்மணித் தியான ஆராதனை நடந்தது. மும்மணித் தியான ஆராதனையில் இயேசு சிலுவையில் சொன்ன 7 வசனங்களின் பேரில் செய்தி கொடுக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-ஆம் நாள் உயிர்தெழுந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் தலைமைகுரு எஸ்.இ.சி.தேவசகாயம் தலைமையில் உதவிகுரு கே.தனசிங் முன்னிலையிலும், நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் பரிசுத்த பரலோக மாதா ஆலயத்தில் பங்குத்தந்தை தோமாஸ் தலைமையிலும், பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் சேகரகுரு டி.ஜி.ஏ.தாமஸ் தலைமையில் சபைஊழியர் கோயில்ராஜ் முன்னிலையிலும், மூக்குப்பீறி தூய மாற்கு ஆலயத்தில் சேகர குருவானவர் டெம்பிள்சாமுவேல்ராஜா தலைமையில் சபை ஊழியர் எட்வின் சுகிர்தராஜ் முன்னிலையிலும் வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்களின் ஆலயத்தில் சேகரகுரு டெம்பிள்சாமுவேல்ராஜா தலைமையில் சபைஊழியர் ஜாண்வில்சன் முன்னிலையிலும்,பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலயத்தில் சேகரகுரு ஜேஸ்பர் அற்புதராஜ் தலைமையில் சபை ஊழியர் டென்சிங் முன்னிலையிலும் நடந்தது. மேலும் வெள்ளமடம், வாழையடி, அகப்பைகுளம், வகுத்தான்குப்பம், மணிநகர், பாட்டக்கரை, ஓய்யான்குடி, நாலுமாவடி, கச்சனாவிளை, நெய்விளை, கடையனோடை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் பண்டகை ஆராதனை நடுஇரவு 12 மணிக்கு சிறப்பு திருவிருந்து ஆராதனையுடன் நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்