எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், தலைமையில் நேற்று (17.04.2017) நடைபெற்றது
மாற்றுத்திறனாளிகள்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல்துறை நடவடிக்கை, புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 268 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக்கொண்டு பரிசீலித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள், மாவட்ட கலெக்டர் மனுநீதி நாள் முகாம் மனுக்கள், மாவட்ட உயர் அலுவலர்களின் மனுநீதி நாள் முகாம் மனுக்கள், மக்களைத்தேடி வருவாய்த்துறை அம்மா திட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆகியவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தாராஜ், ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் வருவாய்த்துறையின் சார்பாக 5 பயனாளிகளுக்கு தலா ரூ.1,20,000 மதிப்பிலான முதியோர் ஓய்வூதியத் தொகைக்கான ஆணையினையும், கருவப்பநாயக்கன்பேட்டை, ஐநூற்றுமங்கலம் என்ற முகவரியைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவர் ஓமன் நாட்டில் இறந்தது தொடர்பாக அவருக்கு சேரவேண்டிய நிலுவைத்தொகை அவரது மனைவிக்கு ரூ.6,00,000 மதிப்பிலான காசோலையும், அவரது தாயாருக்கு ரூ.2,63,856 மதிப்பிலான காசோலையும் ஆகிய நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, மக்கள் குறைதீர்க்கும் தனித்துணை கலெக்டர் ஜான்சிராணி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றும் தேர்தல் இது ம.பி. கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
19 Apr 2024போபால், தற்போது நடைபெறுவது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.