முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்களுக்கு மருத்துவ முகாம்: மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் மருத்துவத்துறை இணைந்து பத்திரிக்கையாளர் மற்றும் பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கான இலவச மருத்துவ முகாம் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று (17.04.2017) நடைபெற்றது. இம்முகாமினை மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு. அசோக்குமார், துணை இயக்குநர் ( சுகாதார பணிகள்) மரு. பிரியா ராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் பத்திரிக்கையாளர்களின் நலனில் கருத்தில் கொண்டு பத்திரிக்கையாளர்களுக்கு மாவட்ட அளவில் பத்திரிகையாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுரையின் படி செய்தி மக்கள்தொடர்பு துறை மற்றும் மருத்துவ துறை இணைந்து பத்திரிகையாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என மொத்தம் 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவ முகாமில் கலந்துக்கொண்டு மருத்துவ பரிசோதனை செய்துக்கொண்டனர். இம்மருத்துவ முகாமில் பொது மருத்துவ பரிசோதனை, பொது மருத்துவம், சர்க்கரை பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, காது, மூக்கு, தொண்டை, இ.சி.ஜி.ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்;; கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அருண், மரு.பரமசிவம், மரு.ராஜ்குமார், மரு.கண்ணன், மரு.யாமினி, மரு.செந்தில்குமார், மரு.லேகா, உதவி மக்கள்தொடர்பு அலுவலர்கள் ( செய்தி) சு.மோகன், (விளம்பரம்) மனோஜ்குமார், வட்டாட்சியர் மோகனசுந்தரம், மற்றும் செய்தியாளர்கள், செவிலியர்கள் கலந்துக்கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்