முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழைய கார், பிரிட்ஜ் விற்க நாடு முழுவதும் மையங்கள் அமைக்கப்படும் :மத்திய அரசு தகவல்

திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2017      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி  - பழைய கார், பிரிட்ஜ், வாஷிங் மிஷின்களை நல்ல விலைக்கு விற்க நாடு முழுவதும் மறுசுழற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் விஜய் குமார் சரஸ்வத் தெரிவித்துள்ளார்.  மத்திய உருக்கு துறை மற்றும் நிதி ஆயோக் ஆகியவை இணைந்து உலோக மறுசுழற்சி கொள்கையை வரையறுத்து வரு கின்றன. இந்த புதிய கொள்கை இன்னும் 6 மாதங்களில் தயாராகி விடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இதுதொடர்பாக நிதி ஆயோக் உறுப்பினர் விஜய் குமார் சரஸ்வத் டெல்லியில் கூறியதாவது:

பழைய கார், பிரிட்ஜ், வாஷிங் மிஷின் ஆகியவற்றை மிகக் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்படுகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண உலோக மறுசுழற்சி கொள்கை வரையறுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சி மையங்கள் அமைக்கப்படும். அங்கு நல்ல விலைக்கு பழைய கார், பிரிட்ஜ் உள்ளிட்டவற்றை விற்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டெல்லியில் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய டீசல் கார்களுக்கு தேசிய பசுமைத் தீர்ப் பாயம் தடை விதித்துள்ளது. மேலும் பி.எஸ். 3 ரக கார்கள், இருசக்கர வாகனங்களை விற்க, பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் அண்மையில் தடை விதித்தது. இந்தப் பின்னணியில் உலோக மறுசுழற்சி கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்