முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவல்துறை காலிப்பணியிடங்கள் சர்ச்சை : 6 மாநிலங்களுக்கு - சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - காவல்துறையில் அதிகப்படியான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட 6 மாநில உள்துறை செயலர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  காவல்துறை காலிப்பணியிடங்கள் தொடர்பாக மனிஷ் குமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹார், நீதிபதிகள் சந்திரசூட், எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் குறிப்பிட்டிருந்த புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், "பிஹார், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, தமிழ்நாடு, மேற்குவங்கம் ஆகிய 6 மாநிலங்களில் காவல்துறையில் அதிகப்படியான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது.

பிஹார், உத்தரப்பிரதேச மாநிலங்களில் முறையே 40,000 மற்றும் 1.5 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. சம்பந்தப்பட்ட மாநிலங்கள் காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை எப்படி நிரப்பப்போகின்றன என்பதை தெரிவிக்க வேண்டும். வரும் 21-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமைச் செயலர்களோ அல்லது அவரால் பணிக்கப்பட்ட அதிகாரியோ நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்