முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய செயலி உருவாக்கி ராம்கோ தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் சாதனை

திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2017      விருதுநகர்
Image Unavailable

ராஜபாளையம் - -இந்தியாவின் முதுகெழும்பாக விவசாயம் விளங்குகிறது.தற்போதைய சூழ்நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பல இடங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.வருடாவருடம் மழையின் அளவும் குறைந்து வருகிறது.தண்ணீர் தாராளமாக கிடைக்கும் நேரங்களில் தண்ணீரின் தேவை எவ்வளவு என்பது தெரியாமல் பயன்படுத்துவதால் தண்ணீர் வீணாகிறது.இதனால் ஏற்படும் தண்ணீர் தட்டுபாட்டினை அறிந்து கொள்ள ராம்கோ தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் விளை நிலங்களில் நிலத்தின்தன்மை மற்றும் தண்ணீரை குறைவாக பயன்படுத்தி அதிக மகசூழ் பெறுவது குறித்து செல் போனில் புதிய செயல் விளக்கத்தினை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்ப கல்லூரி பொறியியல் துறையில் ஒரு பாடப்பிரிவான நீர் மேலாண்மை துறை மாணவிகள் செல் போனில் வேளாண்மை குறித்த புதிய செயல் விளக்கத்தினை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.இக்கல்லூரி மாணவிகள் விருதுநகர் மாவட்டத்தினை தேர்ந்தெடுத்து மாவட்டத்திலுள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், சிவகாசி உள்ளிட்ட எட்டு தாலுகாவிற்கு நேரடியாக சென்று மண் வகைகள், மற்றும் தண்ணீரின் அளவை ஆய்வு செய்து மொபைல் போன் மூலமாக விளக்கியுள்ளனர்.இந்த மொபைல் செயல் விளக்கம் மூலம் தேவையான தண்ணீரின் அளவு. மண்ணீன் தன்மை மற்றும் மழை, கோடை ,குளிர் காலங்களில் எவ்வகையான பயிரினை பயிரிட்டால் அதிக மகசூல் பெற முடியும் என அனைத்து விளக்கங்களும் இந்த மொபைல் போன் செயல் விளக்கம் மூலம் விவசாயிகள் எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

தேசிய அளவில் அப்துல்கலாம் மாசுபாடற்ற தன்மை என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற போட்டியில் ராம்கோ தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் இந்த மொபைல் செயல் விளக்கத்தினை கண்டு பிடித்தமைக்காக இரண்டாம் இடத்தினை பெற்று 50,000ரூபாய்க்கான பரிசு தொகையையும் பெற்றனர். பரிசு பெற்ற மாணவிகளை கல்லூரி  நிறுவனரும், ராம்கோ நிறுவனங்களின் தலைவருமான பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா, கல்லூரி முதல்வர் மகேந்திர கவுடா, சிவில் துறைத்தலைவர் கார்த்திகேயன், கணணி அறிவியல் துறைத்தலைவர் விஜயலட்சுமி,இயற்பியல் துறை உதவி பேராசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் மற்றும் கல்லூரி ஆசிரிய, ஆசிரியைகள் பராட்டினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்