முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூரிய ஒளியால் இயங்கும் வாகனத்தினை கண்டுபிடித்து ராம்கோ தொழிற்நுட்ப கல்லூரி சாதனை

திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2017      விருதுநகர்
Image Unavailable

 ராஜபாளையம், - ராஜபாளையத்தில் இயங்கி வரும் ராம்கோ தொழிற்நுட்ப கல்லூரி மாணவர்கள் அகில இந்திய அளவில் ஆந்திர மாநிலத்தில் கல்லூரிகளுக்கான நடைபெற்ற சூரிய ஒளியினால் இயங்கக் கூடிய வாகன பந்தயத்தில்  பங்கேற்று முதல் பரிசினை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

ராஜபாளையம் முடங்கியாறு செல்லும் சாலையில் இயங்கி வரும் ராம்கோ தொழிற்நுட்ப கல்லூரி இயந்திரவியல் துறையைச் சார்ந்த மாணவ, மாணவிகள் 22பேரும், மின்னணு தொழிற்நுட்ப பிரிவைச் சேர்ந்த மூன்று மாணவர்களும்  முற்றிலும் சூரிய ஒளி  மற்றும் பேட்டரியினால் இயங்கக் கூடிய வாகனத்தை வடிமைத்துள்ளனர்.ஆர்.ஐ.டி – பீனிக்ஸ் என்று பெயரிடப்பட்ட இந்த வாகனம் ஆந்திர மாநிலம் பீமாவரம் என்னும் இடத்தில் ஆசிய அளவில் தொழிற்நுட்ப கல்லூரிகளுக்கான சூரிய ஒளியினால் ஓடக்கூடிய கார் பந்தயத்தில் பங்கேற்றது.130க்கும் மேற்பட்ட அணிகளில் 85அணிகள் கலந்து கொண்டன.இதில் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற பந்தயத்தில் 40மீட்டர் தொலைவினை 34நொடிகளில் கடந்து ஆர்.ஐ.டி – பீனிக்ஸ் காரானது முதல் பரிசினை பெற்று சாதனைப் படைத்தது.இப்போட்டில் முதலிடம் பெற்றமைக்காக ரூ.15,000 பரிசினையும், ஒட்டுமொத்த புள்ளிப்பட்டியளில் தேசிய அளவில் இரண்டாம் இடம் பெற்றமைக்காக 50,000ரூபாய் பரிசினையும் பெற்றது.இத்தகைய போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த தொழிற்நுட்ப பிரிவு மற்றும் மின்னணு பிரிவு மாணவ,மாணவிகளை கல்லூரி நிறுவனரும், ராம்கோ நிறுவனங்களின் தலைவருமான பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா, கல்லூரி முதல்வர் மகேந்திர கவுடா, இயந்திரவியல் துறைத் தலைவர் கருணாகரன், மின்னணுவியல் துறைத்தலைவர் கண்ணன், ஆகியோர் பாராட்டினர், மேலும் கல்லூரி வளாகத்தின் மன்பு மாணவர்கள் வடிவமைத்த சூரிய ஒளியினால் இயங்கக் கூடிய வாகனத்தின் செயல் விளக்கம் குறித்து மாணவர்கள் விளக்கினர். அடுத்த கட்ட முயற்சியாக சூரிய ஒளியினால் இயங்கும் இந்த வாகனத்தினை பாமர ஏழை மக்களும் பயன்படுத்தும் வகையில் மிகக் குறைந்த செலவில் உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவுத் மாணவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்