முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியி்ல் 234 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை

திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2017      திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் 234 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை கடிதம் திங்களன்று வழங்கப்பட்டது.

பணி நியமன ஆணை  

 

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியில் பல்வேறு பிரிவுகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு கடந்த மாதம் பல்வேறு நிறுவனங்களின் சார்பாக வளாக வேலை வாய்ப்பிற்கான முகாம் நடைபெற்றது. இதில் 234 மாணவர்கள் வேலை வாய்ப்பை பெற்றனர்.

 

இந்நிலையில் வேலை வாயப்பை பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வு கல்லூரி வளாகத்தில் டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் கல்லூரி முதல்வர் டாக்டர் பழனி முன்னிலை வகித்தார். கணினி பொறியியல் துறை தலைவர் ஜனார்த்தனன் வரவேற்றார்.

 

நிகழ்வில் டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மின்னனு தொலை தொடர்பு பொறியல் துறையை சேர்ந்த 49 மாணவர்கள், மின்னியல் பொறியி்யல் துறையை சேர்ந்த 46 மாணவர்கள், கணினி பொறியியல் துறையை சேர்ந்த 71 மாணவர்கள், குடிமை பொறியியல் துறையை சேர்ந்த 9 மாணவர்கள், இயந்திர பொறியியல் துறையை சேர்ந்த 59 மாணவர்கள் என 234 பேருக்கு வேலை வாய்ப்பு ஆணையை டிஜெஎஸ் கல்வி குழு தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கி பேசும் போது கிடைக்கும் வாய்ப்புகளை பெற்று வேலையில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி அனைவரும் வாழ்வில் உயர் நிலையை அடைய வாழ்த்தனார்.

வேலை வாய்ப்பு பெற்றவர்களில் ஒருவரான கணினி பொறியியல் துறை மாணவி ஐஸ்வர்யா ஸ்விட்சர்லாந்து நாடு ஜெனிவாவில் உள்ள ஐநா-வின் அங்கமான உலக தொழிலாளர் அமைப்பில்(டபிள்யு.எல்.ஏ) மனித வள மேம்பாட்டு பிரிவில் மாதம் 1,52,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பை பெற்றுள்ளார். நிகழ்வின் முடிவில் கல்லூரியின் வேலை வாய்ப்பு அதிகாரி பரணிதரன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்