செஞ்சி வர்த்தகர் சங்கம் சார்பில் போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி

திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2017      விழுப்புரம்
17ggp03

செஞ்சி வர்த்தகர் சங்கம் சார்பில் போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானம் வழங்கும் நிகழச்சி செஞ்சி கூட்டு சாலையில் திங்கள் அன்று நடைபெற்றது.தற்போது நிலவி வரும் கோடை வெப்பம் காரணமாக போக்குவரத்து காவல் துறையினருக்கு செஞ்சி வர்த்தகர் சங்கம் சார்பில் சங்க தலைவர் செல்வராஜ் தலைமையில் வர்த்தக சங்க நிர்வாகிகள் பழச்சாறு மற்றும் மோர் வழங்கி துவக்கிவைத்தார். காலை 10 மணிக்கு குளிர்பானம் மற்றும் 12 மணிக்கு மோர் மற்றும் பழச்சாறு உள்ளிட்டவற்றை தினமும் தொடர்ந்து இருவேளை வழங்க முடிவு செய்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் செஞ்சி டிஎஸ்பி.ரவிசந்திரன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் அப்பாண்டைராஜ், துணை ஆய்வாளர் முத்துகுமார், சப் இன்ஸ்பெக்டர் அசோகன், வர்த்தர் சங்க செயலர் வெங்கட், நிர்வாகிகள் ராஜகோபால், சையத்பீரான், மதிப்பியல் தலைவர் மொய்தீன்பாஷைா, மாவட்ட தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: