முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'அத்துமீறும்' பயணிகளுக்கு ரூ.15 லட்சம் வரை அபராதம் விதிக்க ஏர் இந்தியா திட்டம்

திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2017      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி  - விமான பயணத்தின் போது விமான நிறுவனத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்படாமல் அத்துமீறி ரகளையில் ஈடுபடும் பயணிகளுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை அபராதம் விதிக்க ஏர் இந்தியா விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது.  பயணிகள் நடத்தை விதிமுறைகளை ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அண்மையில் ஏர் இந்திய விமான ஊழியர்கள் மீதான தாக்குதல் போன்ற சம்பவங்களால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் ஏர் இந்தியா நிறுவனத்தின் மீதான மதிப்பை குறைக்கும் என்பதால் பயணிகள் நடத்தை விதிமுறைகளை வகுத்துள்ளதோடு அவற்றை மீறுபவர்களுக்கு அபராதம் நிர்ணயித்துள்ளதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா  விதிமுறைகள் :
ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கும் பயணிகளால் விமான புறப்பாடு, தரையிறக்கத்தில் தாமதம் ஏற்பட்டால் அபராதத் தொகை வசூலிக்கப்படும்.
* அதன்படி, விமான புறப்பாடு, தரையிறக்கத்தில் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டால் அபராதமாக ரூ.5 லட்சமும் இரண்டு மணி நேரம் தாமதம் ஏற்பட்டால் ரூ.10 லட்சமும், இரண்டு மணி நேரத்துக்கு மேல் தாமதம் ஏற்பட்டால் ரூ.15 லட்சமும் சம்பந்தப்பட்ட பயணியிடம் இருந்து வசூலிக்கப்படும்.
* ஏர் இந்தியா விமான ஊழியர்கள் ஊடகங்களுக்கு நேடியாக பேட்டியளிக்க தடை விதிக்கப்படுகிறது.
* தகராறில் ஈடுபடும் பயணிகள் மீது சட்டத்துக்கு உட்பட்டு போலீஸ் புகார் / எப்ஐஆர் பதிவு செய்யப்படும்
* பயணிகள் ரகளையில் ஈடுபட்டால் உடனடியாக விமான நிலைய மேலாளர், மூத்த மேலாளர், ஆர்.டி., சி.டி., சிஎம்டி உள்ளிட்ட பதவிகளில் இருப்பவர்களுக்கே தகவல் அளிக்கப்பட வேண்டும்.
* சட்டத்திட்டங்களை மதிக்காமல் நடந்துகொள்ளும் பயணிகளை கையாள்வது எப்படி என்பது குறித்து விமான நிலைய ஊழியர்கள், பாதுகாப்பு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நடவடிக்கையை மேற்கொள்ள கடந்த 7-ம் தேதி திரிணமூல் எம்.பி. டோலா சென் வருவதற்கு தாமதமானது. சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் ஏர் இந்தியா விமான ஊழியரை தாக்கியது, ஏர் இந்தியா அதிகாரி ஒருவரை ஒய்.எஸ்.ஆர்.சி., எம்.பி., மிதுன் ரெட்டி தாக்கியது போன்ற சம்பவங்களை அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago