முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை: அமைச்சர்கள் கடம்பூர்ராஜீ, சேவூர்ராமச்சந்திரன் ஆய்வு

திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2017      தூத்துக்குடி

கோவில்பட்டியில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைப்பது பற்றி அமைச்சர்கள் கடம்பூர்ராஜீ, சேவூர்ராமச்சந்திரன் ஆகியோர் நேற்று மலைமீது அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர். முருகன் சிலை உலகிலேயே மிக உயரமாக மலேசியாவில்தான் உள்ளது. அதைவிட உயரமான சிலை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைய உள்ளது. இந்து அறநிலையதுறை சார்பில் திருச்செந்தூரில் 150அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்க கடந்த ஆட்சியின்போதே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அப்போது ஆகமவிதிகள் பொருந்தாத காரணத்தால் அங்கு சிலை நிறுவபடவில்லை. அப்போது முதல்வர் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஆசீ~;குமார் மற்றும் அமைச்சர் கடம்பூர்ராஜீ ஆகியோர் கோவில்பட்டி மலைமீது அந்தசிலையை நிறுவ கோரிக்கை விடுத்தனர். அதற்கிடையில் பல்வேறு காரணங்களால் சிலை நிறுவும் பணி தடைபட்டது. இதற்கிடையில் திருநெல்வேலியில் நடந்த அரசு நலதிட்டங்களை முடித்துவிட்டு கோவில்பட்டியில் கதிரேசன்மலை மீது அன்னதானதிட்டத்தை துவக்கி வைக்கவந்த முதல்வர் எடபாடிபழனிசாமியிடம் மீண்டும் முன்னாள்முதல்வர் ஜெயலிலதாவின் ஆசையை நிறைவேற்ற அமைச்சர் கடம்பூர்ராஜீ கோரிக்கை விடுத்தார். அதனடிப்படையில் பணிகள் மீண்டும் முடுக்கிவிடபட்டது. நேற்று கோவில்பட்டிக்கு வந்த இந்துஅறநிலையதுறை அமைச்சர் சேவூர்ராமச்சந்திரன், கடம்பூர்ராஜீ, ஆகியோர் இந்து அறநிலையதுறை அதிகாரிகளுடன் சிலை அமைப்பு குறித்த ஆய்வுபணியில் ஈடுபட்டனர். ஸ்தபதி வரைந்த வரைபடம், அதற்கான இடம், ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அப்போது   அதிமுக கோவில்பட்டி பெருநகரகழக செயலாளர் எஸ்.விஜயபாண்டியன், ஒன்றியசெயலாளர் அய்யாத்துரைபாண்டியன், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு மண்டல செயலாளர் பொன்ராஜ், மாவட்ட விவசாயஅணி செயலாளர் ராமச்சந்திரன், அம்மாபேரவை ஒன்றிய செயலாளர்; ஈஸ்வரபாண்டியன், உட்பட பலர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்