முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'457-விசா' திட்டம் ரத்து : ஆஸ்திரேலியா முடிவால் இந்திய பணியாளர்களுக்கு பாதிப்பு

செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

மெல்போர்ன்  - ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் பயன்படுத்தி வந்த '457 விசா' திட்டம் ரத்து செய்யப்படுவதாக அந்நாடு தெரிவித்துள்ளது.  இதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் '457 விசா'வை பயன்படுத்தி தற்காலிகமாக பணியற்றி வந்த வெளிநாட்டு பணியாளர்கள் 95,000 பேர் பாதிக்கப்படவுள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோ இந்தியர்கள், சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவில் நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டத்தை சரி செய்யவே '457 விசா' திட்டம் ரத்து நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறியபோது, "ஆஸ்திரேலியா பிற நாட்டினர் தங்கி பணிபுரிவதற்கான நாடுதான். இருப்பினும் உண்மை என்னவென்றால் ஆஸ்திரேலியாவில் உள்ள வேலை வாய்ப்புகளில் ஆஸ்திரேலியர்களுக்குதான் முன்னுரிமை அளிக்கப்படும்.

இதன் காரணமாக '457 விசா' திட்டம் ரத்து செய்யப்படுகிறது. இந்த விசாவின் மூலம் வெளிநாட்டு பணியாளர்கள் தற்காலிகமாக ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வந்தனர். நாங்கள் இனியும் '457 விசா' திட்டத்தை தொடரப்போவதில்லை. அந்த வேலை வாய்ப்புகள் ஆஸ்திரேயர்களுக்கு சேர வேண்டியவை. ஆஸ்திரேலியா ’ஆஸ்திரேலியர்களுக்கு முதலுரிமை’ என்ற அணுகுமுறையை ஏற்றுக் கொண்டுள்ளது" என்றார். இந்த விசாவின் மூலம் பணியாற்றி வந்தவர்களில் பெரும்பாலனோர் இந்தியர்கள். இவர்களுக்கு அடுத்த இடத்தில் சீனா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். '457 விசா' திட்டத்துக்கு பதிலாக வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு கட்டுபாடுகளுடன் கூடிய மற்றுமொரு தற்காலிக விசா முறை அறிவிக்கப்பட இருப்பதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்