முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குறைந்த மூல மருந்துகளை மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,  - மருத்துவர்கள், நோயாளிகளுக்கு விலை குறைந்த மூல மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வகை செய்யும் சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என்று பிரதமர்  நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  குஜராத் மாநிலம் சூரத்தில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை ஒன்றை திறந்து வைத்த பிரதமர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் இதனைத் தெரிவித்தார். தற்போது மருத்துவர்கள் எழுதித்தரும் மருந்துச் சீட்டுகள், சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதாகவும், இதனால், மருந்து கடைகளை நம்பியே நோயாளிகள் மருந்துகளை வாங்குவதாகவும் குறிப்பிட்ட பிரதமர், இந்த மருந்துகள் விலை அதிகமாக இருப்பதால், ஏழை நோயாளிகளால் வாங்க முடியாமல் போவதாகவும் தெரிவித்தார். இதனைத் தடுக்க, இனிமேல் பெரிய கம்பெனிகள் தயாரிக்கும் மருந்துகளுக்கு பதிலாக மூல மருந்துகளை மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், இதற்காக புதிய சட்டம் ஒன்று விரைவில் கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்