முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டம் பண்ணாரி பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழாவில் தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகளை விளக்கும் புகைப்படக்கண்காட்சியினை ஏராளமான பொது மக்கள் பார்வையிட்டனர்

செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2017      ஈரோடு

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், பண்ணாரி அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் குண்டம் திருவிழாவினை  முன்னிட்டு ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கிடும் வகையில் சிறப்பு புகைப்படக்கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இச்சிறப்பு புகைப்படக் கண்காட்சியில் மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா  ஏழை, எளியோர், மாணவ, மாணவியர்கள், மகளிர், முதியோர், மாற்றுத்திறானாளிகள் என குழந்தைகள் முதல் முதியோர் வரை “எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்ற உயரிய நோக்கத்தோடு அறிவித்த விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள், அரிசி, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை குறித்தும், ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு தாலிக்குத் தங்கமும், நிதியுதவியும், பசுமை வீடுகள் திட்டம், மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா சீருடைகள், பாடப்புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள், மிதிவண்டி, மடிக்கணினி போன்ற சிறப்புமிகு திட்டங்கள் குறித்தும், அம்மா குடிநீர், அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா உப்பு, பண்ணைப் பசுமை காய்கறி நுகர்வோர் திட்டம், விலையில்லா சானிடரி நாப்கின் வழங்கும் திட்டம், திருக்கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம், அம்மா சிமெண்ட், தொட்டில் குழந்தை திட்டம், பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம், டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம், மக்களைத் தேடி வருவாய்த்துறை செல்லும் அம்மா திட்டம், அம்மா குழந்தை நலப் பரிசு பெட்டகம் என பல்வேறு திட்டங்கள் குறித்தும் புகைப்படங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்கள் பற்றியும், புகைப்படங்கள் வாயிலாக ஒரே இடத்தில் அனைத்து மக்களும் எளிய முறையில் அறிந்து கொள்ளும் வகையில் இப்புகைப்படக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இன்று (10.04.2017) தொடங்கிய தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக்கண்காட்சியானது தொடர்ந்து 11.04.2017 மற்றும் 12.04.2017 ஆகிய 2 நாட்கள் நடைபெறும். இப்புகைப்படக்கண்காட்சியை பொதுமக்கள் அனைவரும் கண்டு அரசின் திட்டங்கள் பற்றி தெரிந்து பயன்பெறுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்