டவுன்ஹால் புதியநிர்வாகிகள் தேர்வு

செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2017      வேலூர்

அரக்கோணம் டவுன்ஹால் புதிய நிர்வாகி பதவி தேர்வில்; பலர் போட்டியின்றியும் சில பதவிகளுக்கு தேர்தல் வாயலாகவும் தேர்ந்தெடுக்கபட்டு உள்ளனர். இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரின் மைய பகுதியில் தி டவுன்ஹால் அமைந்து உள்ளது. நூற்றாண்டு பழமை கொண்ட இந்த டவுன் ஹாலுக்கு மொத்தம் 21 பேர் பொறுப்பாளர் பதவி வகித்து செயல்பட்டு வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் ஜனநாயக மரபுபடி தேர்தல் நடத்தபட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபடுவதும் வாடிக்கை அதன்படி வருகிற 2017-19 ஆகிய இரண்டாண்டு பதவிக்கு தேர்தல் அறிவிக்கபட்டது. பொது செயலாளர் பதவி ஒன்று இந்த பதவிக்கு மனுதாக்கல் செய்த டாக்டர் எஸ்.பன்னீர்செல்வம் போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார். அதுபோல் துணை தலைவர் பதவி இரண்டு இதற்கு மனு கொடுத்த 1.தேவன்பு, 2.நாகராஜனும். உதவி செயலாளர்கள் பதவி இரண்டு இதற்கு மனு கொடுத்த 1.நைனாhசிலாமணி (நிர்வாகம்) 2.சாய்குமார் (நிதி) மற்றும் சமூக நலபொறுப்பாளர் பதவி ஒன்று இதற்கு போட்டியிட்ட ஆர்.வெங்கட்டரமணன் நூலக பொறுப்பாளர் பதவி ஒன்று இதற்கு மனு கொடுத்த வி.கோவிந்தராஜ் ஆகியோரும்; தணிகையாளராக ரூபன்பிரபு, சட்ட ஆலோசகராக சுதர்சனம் ஆகியோரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கபட்டனர். மீதமுள்ள பொருளாளர் பதவி போட்டியில் முனுசாமி, கட்டிட பொறுப்பாளர் பதவி போட்டியில் ரமேஷ், விளையாட்டு பொறுப்பாளர் பதவி போட்டியில் ரவீந்தர் ஆகியோருடன் 10 செயற் குழு உறுப்பினர் பதவிக்கான போட்டியில் (22 பேர் பங்கேற்பு) 1.பாஸ்கர், 2.டாக்டர் ராஜசேகர், 3.கே.பாலாஜி, 4.குகன், 5.காமேஷ், 6.பி.பாஸ்கர், 7.ஜிவி.ஜெய்சங்கர், 8.ரோஸ்குமார், 0.ஜிகே.வெங்கடேஷ், 10.ஜிகே.சிவபிரசாத் ஆகிய பத்து பேர் கடும் போட்டியின் மத்தியில் தேர்ந்தெடுக்கபட்டனர். தேர்தல்களை மூத்த உறுப்பினர்கள் லட்சுமிபதி, மற்றும் ரவிசந்திரன் ஆகிய இருவர் வழிநடத்தினர். முன்னதாக புதிய கட்டிட கல்வெட்டை மூத்த உறுப்பினர் டிஆர்.சுப்பிரமணியம் திறந்து வைத்தார். கட்டிட பொறியாளர்கள் நான்கு பேருக்கு பாராட்டு விழா, மற்றும் உறுப்பினர்களின் குடும்ப கலக்கல் நிகழ்வுகளுடன் பொதுமகா சபை கூட்டமும் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. இறுதியில் சமூக நலபொறுப்பாளர் ஆர்.வெங்கட்டரமணன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: