முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்லிமலை போன்ற பின்தங்கிய வட்டாரங்களை மேம்படுத்திட அரசு பல்வேறு வேளாண் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது: கலெக்டர் மு.ஆசியா மரியம் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2017      நாமக்கல்
Image Unavailable

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், செம்மேடு, வல்வில் ஓரி அரங்கில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி சிறப்புத்திட்டம், சிறு, குறு விவசாயிகளுக்கான வாழ்வாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கொல்லிமலை மலைவாழ் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கும் விழா நேற்று (18.04.2017) நடைபெற்றது. இவ்விழாவிற்கு சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சி.சந்திரசேகரன் அவர்கள் முன்னிலை வகித்தார். இவ்விழாவிற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையேற்று கொல்லிமலை பகுதியைச் சேர்ந்த வேளாண் பெருமக்களுக்கு வேளாண் இடுபொருட்களை வழங்கி பேசும்போது தெரிவித்ததாவது,தமிழக அரசு மாநில சமச்சீர் நிதி சிறப்புத்திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு செய்து அதில் தேர்வு செய்யப்படுகின்ற பின்தங்கிய வட்டாரங்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அந்தவகையில் நாமக்கல் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் ஆய்வுகள் நடத்தப்பட்டு 5 வட்டாரங்கள் பின்தங்கிய வட்டாரங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவற்றில் கொல்லிமலை வட்டாரம் மிகவும் பின்தங்கிய வட்டாரமாக தேர்வு செய்யப்பட்டு, இவ்வட்டாரத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் வேளாண்மைத்துறையின் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி சிறப்பு திட்டத்தின் கீழ் தன்னார்வ தொண்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு அதன்மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகளும், உதவிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. கொல்லிமலை வட்டாரத்தில் வேளாண்மைத்துறை வளர்ச்சிக்காக ஒரே மாதிரியான பல்வேறு வேளாண் வளர்ச்சித்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக இதுபோன்ற பின்தங்கிய வட்டாரத்திற்கென தனிகவனம் செலுத்தி வேளாண்மைத்துறையின் பல்வேறு தொழில் நுட்பங்கள் மற்றும் திட்டங்களை தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலமாக வழங்கி வருகின்றது. வேளாண் திட்டங்களையும், நவீன தொழில் நுட்பங்களையும் இத்தகைய விவசாயிகளுக்கு வழங்கி வருவாயை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் இதுபோன்ற தொண்டு நிறுவனங்களின் மூலமாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. கொல்லிமலையில் நன்கு விளையக்கூடிய மிளகு, காபி போன்றவற்றை அதிகம் உற்பத்தி செய்திட வேளாண் பெருமக்கள் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்திட வேண்டும். மேலும் நஞ்சில்லா விவசாயம் என்பதற்கேற்ப இயற்கை வேளாண் உற்பத்தியில் விவசாயிகள் முழுமையாக ஈடுபடவேண்டும். மண் வளத்தையும், மனித இனத்தையும் காத்திட இயற்கை வேளாண் உற்பத்தி முறையில் விவசாயிகள் ஈடுபட்டால் அதிக இலாபம் ஈட்டமுடியும். அதன்மூலம் சமூதாயத்திற்கும் நஞ்சில்லா நல்லா பொருட்களை உற்பத்தி செய்து வழங்கவும் முடியும். எனவே வேளாண் பெருமக்கள் தற்போது உள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்குவதோடு, அதன்மூலம் நல்ல வருவாயை ஈட்டி தங்களின் வாழ்க்கைத்தரத்தையும் மேம்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் மு.ஆசியா மரியம் பேசினார். மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி சிறப்புத்திட்டம், சிறு, குறு விவசாயிகளுக்கான வாழ்வாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் தானம் அறக்கட்டளையின் சார்பாக கொல்லிமலை பகுதியைச் சேர்ந்த 150 விவசாயிகளுக்கு ரூ.3,80,000 மதிப்பீட்டில் காபி, மிளகு, சவுக்கு கன்றுகளையும், 12 விவசாயிகளுக்கு ரூ.40,400 மதிப்பிலான கைத்தெளிப்பான் கருவிகளையும், 10 விவசாயிகளுக்கு ரூ.20,000 மதிப்பிலான தேனி வளர்ப்பு பெட்டிகளையும், 4 விவசாயிகளுக்கு ரூ.25,000 மதிப்பிலான இயற்கை மண்புழு உரம் தயாரிப்பிற்கான உபகரணங்களையும், 5 விவசாயிகளுக்கு ரூ.6,000 மதிப்பிலான நுண் உயிர் உரங்களையும், 10 விவசாயிகளுக்கு ரூ.2,300 மதிப்பிலான மண்வள அட்டைகளையும், 1 விவசாயிக்கு ரூ.8,618 மானியத்துடன் ரூ.18,098 மதிப்பீட்டில் நீர் இறைக்கும் மோட்டார் பம்பு செட் கருவியினையும், 1 வாழவந்தி நாடு மிளகு உற்பத்தி விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவிற்கு டி.விரிடி உற்பத்தி மையம் அமைப்பதற்கு ரூ.30,347 மதிப்பிலான இடுபொருட்களையும், ஒருங்கிணைந்த மேலாண்மைத்திட்டத்தின் கீழ் 8 மகளிர் மற்றும் ஆண்கள் சுயஉதவிக்குழுக்களுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.2.00 இலட்சம் சுழல்நிதிக்கான காசோலைகளையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 2 விவசாயிகளுக்கு ரூ.59,853 மதிப்பிலான தெளிப்பு நீர் மற்றும் சொட்டுநீர் பாசனக்கருவிகளையும், வருவாய்த்துறையின் சார்பில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 10 நபர்களுக்கு ரூ.1,05,000 இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்காக காசோலைகளையும், 5 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளையும், 6 நபர்களுக்கு பட்டா மாறுதல் உத்தரவு என இவ்விழாவில் மொத்தம் 224 பயனாளிகளுக்கு ரூ.8,86,978 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார். இவ்விழாவில் கொல்லிமலை வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.சுப்பிரமணியம் அவர்கள் வரவேற்புரையாற்றினார். வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.கலியராஜ், சென்னை மாநில திட்டக்குழும (வேளாண்மை) துறைத்தலைவர் டாக்டர்.கே.ஆர்.ஜெகன்மோகன், மாநில திட்ட வேளாண்மை துணை இயக்குநர் பி.கணேசன். மாவட்ட திட்ட மைய செயலர் எம்.பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாத பிரகாசம், கே.வி.கே.கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் (உழவியல் துறை) டாக்டர்.எஸ்.அழகுதுரை, டாக்டர்.சி.சர்மிளா பாரதி (தோட்டக்கலைத்துறை) கொல்லிமலை வேளாண்மை அலுவலர் டி.கௌதமன், தானம் அறக்கட்டளை திட்ட தலைவர்கள் எ.மதன்குமார் (மதுரை), எம்.சந்தானம் (சென்னை) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தானம் அறக்கட்டளை திட்ட ஒருங்கிணைப்பாளர் எ.ரமேஷ் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago