முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மல்லையா கைது :முன்னாள் ஊழியர்கள் கொண்டாட்டம்

செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

சென்னை  -  லண்டனில் ஸ்காட்லாண்டு யார்டு போலீசாரால் விஜய் மல்லையா கைது செய்யப்பட்டிருக்கும் செய்தி கிங்பிஷர் நிறுவன முன்னாள் ஊழியர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. நீதி நிச்சயம் ஒரு நாள் வெல்லும் என்று நம்பிக்கையோடு காத்திருந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன ஊரியர்கள் ஏப்ரல் 18, 2017ம் ஆண்டு மறக்க முடியாத நாள். லண்டனில் தலைமறைவாகி ஓராண்டு ஆன நிலையில் நேற்று அதிகாலையில் விஜய் மல்லையா கைது செய்யப்பட்டிருக்கும் செய்தி வெளியான அடுத்த கனம் சில நிமிடங்கள் ஆச்சரியப்பட்டாலும், இந்த நடவடிக்கையை இன்முகத்தோடு கொண்டாடத் தொடங்கியுள்ளனர்

முன்னாள் ஊழியர் ஒருவர்   இந்த கைது நடவடிக்கை பற்றி கூறுகையில் : இது நிச்சயம் மகிழ்ச்சியான செய்தி. ஸ்காட்லாந்து போலீசார் கைது செய்திருப்பது உண்மை என்றால், நீதிக்கு முன் எந்த செல்வாக்கும் செல்லாது என்று நிரூபனம் ஆகியுள்ளது. விஜய் மல்லையா கைது செய்யப்பட்டதால் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த நன்மையும் இல்லை, ஆனால் அவரால் பாதிக்கப்பட்ட முன்னாள் ஊழியர்கள், தங்களின் ஊதிய பாக்கிக்காக இன்றும் போராடும் நபர்களுக்கு இது நிச்சயம் நல்ல நாள்" என்று தெரிவித்தார்.

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முதல் ஊழியரான நரேந்திரநாத் விஜய் மல்லையா கூறுகையில், " எப்படியும் எங்களுக்கு எங்களுடைய ஊதிய பாக்கி கிடைக்காது என்றாலும், விஜய் மல்லையாவை கைது செய்து நாடு கடத்தி வழக்கை சந்திக்கச் செய்வதே மகிழ்ச்சியான செய்தி தான்""மல்லையா வழக்கை லலித்மோடி விவகாரம் போல காலம்கடத்தாமல் செயல்பட்ட இந்திய அரசுக்கு நன்றி, லண்டன் தனக்கு பாதுகாப்பான இடம் என மல்லையா நினைத்தார், ஆனால் இப்போது நீதி வென்றுள்ளது" என்று மகிழ்கிறார் நரேந்திர நாத்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago