முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி சாட்டையால் அடிப்பது போல் சித்தரித்து விவசாயிகள் போராட்டம்

செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  -  தமிழக விவசாயிகள் டெல்லியில் மேற்கொண்டுள்ள போராட்டம் நேற்று 36வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி போல் வேடமிட்டவர் விவசாயிகளை சாட்டையால் அடிப்பது போன்று சித்தரித்து விவசாயிகள் நேற்று போராட்டம் நடத்தினர்.  அய்யாக்கண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள் கடந்த 14ஆம் தேதி முதல் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.எலிக்கறி உண்பது, பாம்புக்கறி உண்பது, சேலை கட்டுவது, பிச்சையெடுப்பது, மண்சோறு சாப்பிடுவது, மண்டைஓட்டை ஏந்தியிருப்பது. போட்டை அழிப்பது, பெண் வேடமிடுவது என நாள்தோறும் பல்வேறு நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்திலும் போராட்டம்
 தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.ஆனால் விவசாயிகளின் போராட்டம் குறித்து இதுவரை மத்திய மாநில அரசுகள் வாய் திறக்கவில்லை.

36வது நாளாக போராட்டம்
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிட முடியாது என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அதன்படி நேற்று 36வது நாளாக போராட்டத்தை தொடர்ந்துள்ளனர் விவசாயிகள். கோவணத்துடன் அரைநிர்வாணமாக போராடி வரும் அவர்களை பிரதமர் மோடி போல் வேடமிட்டவர் சாட்டையால் அடிப்பது போன்று நேற்று விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது விவசாயிகள் தங்களை காப்பாற்றுங்கள் என கதறுவது போன்றும் சித்தரித்து போராட்டம் நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்