முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடை கால வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்: கலெக்டர் வா.சம்பத் வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2017      சேலம்

சேலம் மாவட்டத்தில் கோடை கால வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள தேவையான பாதுகாப்பு நடைவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இது குறித்து கலெக்டர் வா.சம்பத், தெரிவித்ததாவது.கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் தமிழக அரசால் தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய் துறைகள் மூலம் கோடைகாலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வினை தேவையான அளவு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கோடைகாலங்களில் உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் நாள் ஒன்றுக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடித்திடவும், பருத்தி ஆடைகளை தளர்வாக அணிவதாலும், நீர் சத்து அதிகம் கொண்டுள்ள பழங்களை உட்கொள்வதாலும், உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் நம்மை பாதுகாத்து கொள்ளலாம். கோடை காலங்களில் வெய்யிலின் தாக்கம் அதிகமாக உணரப்படும் நேரமான நண்பகல் 12.00 மணி முதல் மாலை 03.00 வரை அவசிய தேவை இல்லையெனில் வெளியில் செல்வதை குறைத்து கொள்ளலாம். கோடை காலங்களில் உடை தாராளமாகவும், இறுக்கமாக அணியாமலும், பருத்தி உடையாகவும் மற்றும் மிதமான நிறமுடையவற்றை அணிய வேண்டும். பகல் நேரங்களில் வெளியில் செல்லும் போது குடை, தொப்பி, மூக்கு கண்ணாடி, ஷு, மற்றும் காலணிகள் அணிந்து கோடை வெப்பத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும் போது அவசியம் குடிநீர் எடுத்து செல்லவேண்டும். டீ, காபி, மது, மற்றும் குளிர்பானங்கள் தவிர்த்தல் வேண்டும். அதிக புரதம் உள்ள உணவுகள் மற்றும் துரித உணவுகள் உண்பதை தவிர்த்தல் வேண்டும். வெளிபுறங்களில் வேலை செய்யம்போது முகம் மற்றும் கழுத்து பகுதிகளை ஈரத்துணிகளை கொண்டு மறைத்து பாதுகாத்துக்கொள்ளவேண்டும். நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்குள் குழந்தைகளை உள்ளே அமரவைக்க கூடாது. வீட்டில் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்களான உப்பு நீர் கரைசல், தயிர், மோர், எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை உட்கொள்ளுவது மூலம் உடலிருந்து நீர் வெளியேற்றம் செய்யப்படுவது தடுக்கப்பட்டு உடல் வெப்பத்தில் இருந்து பாதுகாக்கப்படுகிறது. 450 செல்சியஸ்க்கு மேல் வெப்பம் இருக்கும் போது உடலில் கொப்புளம், அதிக வியர்வையினால் நீர் வறட்சி தன்மை, கண் சோர்வு, உடல் தள்ளாட்டம், மயக்கம் மற்றும் கீழே விழுதல் கூட ஏற்படலாம். சூடான உணவு, அவசர உணவுகள், மாமிச உணவு வகைகள், கார உணவுகள் மிளகு, திப்பிலி, சுக்கு மற்றும் அஜினோமோட்டோ கலந்து உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும், பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் உள்ளாட்சித்துறைகள் மூலம் போதிய குடிநீர் வசதி ஏற்படுத்திடவும் இது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் கோடைகாலங்களில் உடலுக்கு தேவையான நீர் சத்து குறையாத வகையில் பாதுகாத்து கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் வா.சம்பத், தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago