முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினிக்கு அரசியல் பற்றி ஒன்றுமே தெரியாது: சுப்பிரமணியசாமி பரபரப்பு பேட்டி

செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2017      அரசியல்
Image Unavailable

வேலூர்  -  ரஜினிக்கு அரசியல் பற்றி ஒன்றுமே தெரியாது என பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.தமிழக அரசியல்வாதிகள் அனைவரும் சிறந்த நடிகர்கள் என்றும் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் கலவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சுப்பிரமணிய சாமி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சாந்தன், பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 பேரும் விடுதலையாக வாய்ப்பில்லை என்றார்.

ரஜினிக்கு ஒன்றுமே தெரியாது
மேலும் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சுப்பிரமணியசாமி ரஜினிகாந்துக்கு அரசிலைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று நக்கலாக கூறினார்.மேலும் தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சுப்பிரமணிய சாமி தமிழக அரசியல்வாதிகள் அனைவரும் சிறந்த நடிகர்கள் என கிண்டலடித்தார்.  ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா குடும்பத்திற்கு ஆதரவாக பேசி வரும் சுப்பிரமணிய சாமி  தினகரன் இரட்டை இலைச்சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில் அதற்கு ஆதாரம் உள்ளதா என கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்