முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவையில் ரத்த புற்றுநோயாளிகள் சிகிச்சைக்கு தொண்டு நிறுவனம் நிதி உதவி

செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2017      கோவை

ரத்தம் மற்றும் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தொண்டு நிறுவனம் மற்றும் குணமடைந்த ரத்த புற்றுநோயாளிகளுக்கான திருமண தகவல் வெப்சைட் ஏப்ரல் 21-ம் தேதி 11 மணியளவில் கோவை ரத்தினா ரெசிடென்ஸி ஹோட்டலில் துவக்கவிழா நடக்கிறது.

இவ்விழாவானது ரத்தம் மற்றும் ரத்தபுற்றுநோய் அதிநவீன சிகிச்சை மையம், கோயமுத்தூர் கிட்னி சென்டர் சார்பாகவும் மேக்ஸ் நிறுவனம் சார்பாகவும் நடத்தப்படுகிறது. குணமான ரத்தப் புற்று நோயளிகளுக்கு எழுச்சியூட்டும் வகையிலும் மறுவாழ்வு கிடைக்கும் வகையில் இவ்விழாவை மேக்ஸ் நிறுவனத்தினர் நடத்தவுள்ளார்கள்.

இதுகுறித்து டாக்டர் சுதந்திரகண்ணன் கூறியதாவது முதன் முறையாக தமிழ்நாட்டில் ரத்தம் மற்றும் ரத்த புற்று நோயாளிகளுக்கு நிதியுதவி அளிக்க அமைக்கப்பட்ட அமைப்பு, “ரத்தம் மற்றும் ரத்த புற்றுநோய்களுக்கான தொண்டு நிறுவனம்” ஆகும். இவ்வமைப்பின் முக்கிய குறிக்கோளானது ரத்தம் மற்றும் ரத்த புற்றுநோய்களுக்கு உதவுவதும், அவர்களின் தரத்தை உயர்த்துவதும் ஆகும். ருத்த புற்று நோயானது குணப்படுத்த கூடியது. பரவலாக குழந்தைகளை பாதிக்கும். இந்த ரத்த புற்றுநோயானது குழந்தைகளுக்கு 80-90 சதம் குணப்படுத்தக்கூடியது. இருந்த போதிலும் பெரியவர்களில் இந்த நோயை குணப்படுத்தும் சதவிகிதம் குறைந்து காணப்படுகிறது.

பல நோயாளிகள் இரும்பு சத்து குறைப்பு சிகிச்சை செய்வதில்லை அதனால் அவர்களது ஆயுட்காலம் 20-வயதிற்கும் குறைவாக இருக்கிறது. இப்பொழுது உடன் பிறந்த சகோதர்கள் இல்லை எனினும் தாய் தந்தை இருந்து மாற்று சிகிச்சை செய்ய முடியும். இவ்வகையான பிரச்சனைகளை காப்பகத்தில் கண்டு பிடிக்க முடியும் ஆனால் பல குடும்பங்கள் அதற்கான செலவு செய்ய முடிவதில்லை. இவர்களுக்கு உதவுவதும் இத்தொண்டு நிறுவனத்தின் நோக்கமாகும். மேலும் நோய் குணமடைந்தாலும் சமூக சூழ்நிலையினால் திருமண வரன் பார்க்கும்போது பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

பல குணமடைந்த நோயாளிகளின் பெற்றோர் தகுந்த வரன் கிடைக்காமல் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இவைவகையான  பிரச்சனைகளை களைய ரத்தம் மற்றும் ரத்த புற்றுநோய் அமைப்பு குணமடைந்த புற்றுநோயாளிகளுக்கு திருமண தகவல் மையத்தினை துவங்கியுள்ளது.

இந்த குழுவில் சி.எம்.எல் என்ற ரத்த புற்றுநோயால் குணமடைந்தவர்கள் ஒன்று சேருகிறார்கள். மேக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறது. இதற்கு கோவை கிட்னி சென்டர் மருத்துவமனை விஜிவெங்கடேசன் மேக்ஸ் அமைப்புடன் இணைந்து இந்த தொண்டு நிறுவனத்தைத் துவக்குகிறார். அதிநவீன ரத்த மற்றும் ரத்த புற்று நோய் மையம் மற்றும் மேக்ஸ் அமைப்புடன் சேர்ந்து விஜி வெங்கடேசன் அமைப்பு நடத்துகிறார் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்