கணியம்பாடி ஒன்றியம் நெல்வாய் கிராமப்பகுதிகளில் ரோட்டரி மைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகள்: கலெக்டர் சி.அ.ராமன், மாவட்ட முதன்மை நீதிபதி ஆனந்தி துவக்கி வைத்தனர்

செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2017      வேலூர்
1

வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியம் நெல்வாய் பகுதியில் உள்ள ஊராட்சி ஏரியில் ரோட்டரி சங்கங்களின் சார்பில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை கலெக்டர் சி.அ.ராமன், மாவட்ட முதன்மை நீதிபதி ஆனந்தி துவக்கி வைத்தார்கள்.பின்னார் கலெக்டர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-வேலூர் மாவட்டம் முழுவதிலும் சுமார் 16000 ஹெக்டேர் பரப்பளவில் சீமை கருவேல மரங்கள் இருக்கிறது. இதில் தற்போது வரை 1951 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. இப்பணிகள் தொண்டு நிறுவனங்கள், வழக்கறிஞர்கள் சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலம் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. மேலும் இப்பணிகளை விரைவாக முடித்திட பொதுமக்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் தன்னார்வ நிதியுதவிகள் கோரப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து இத்திட்டத்திற்கு தனது சமூக பங்களிப்பை ஆற்றிட வேண்டும். இந்த நிதி உதவிகளை கொண்டு இயந்திரங்கள் மூலம் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்படும். இன்று வேலூர் காட்பாடி ரோட்டரி சங்கங்களின் மூலம் கணியம்பாடி ஒன்றியம் நெல்வாய் ஊராட்சியில் உள்ள 45 ஹெக்டேர் பரப்பளவுள்ள ஊராட்சி ஏரியை சீமை கருவேல மரங்களை வேரோடு அகற்றும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. சுமார் 80 மணி நேரம் இயந்திரங்களின் உதவியோடு இப்பணிகள் நடைபெறும். மேலும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பணியாளர்களின் மூலமும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அந்தந்த பகுதியில் உள்ள நிர்வாகங்கள் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆகவே பொதுமக்கள் தங்கள் பட்டா நிலங்கள் மற்றும் தாங்கள் வசிக்கும் பகுதியை சுற்றி வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றிட விழிப்புணர்வுடன் சமூக பணியாற்றிட வேண்டும என கலெக்டர் சி.அ.ராமன், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் நீதிபதி நடராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.தா.செங்கோட்டையன், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) பெரியசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிமேகலை, மணவாளன், வட்டாட்சியர் (வேலூர்) பழனி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் உமாசங்கர், வெங்கடேன், சின்னச்சாமி, தாமோதரன், செல்வம், ரங்கநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: