முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியுடன் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் மாஸ்டர் நேற்று புதுடெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் மாஸ்டர் தெற்காசியாவில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். முதலில் அவர், ஆப்கானிஸ்தானுக்கு சென்றார். அதனையெடுத்து பாகிஸ்தானுக்கு சென்றார். அங்கு அந்த நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் உயரதிகாரிகளை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இந்தியா-பாகிஸ்தான் இடையே தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து அவரகள் விவாதித்தனர்.  பாகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று புதுடெல்லி வந்தார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இருநாடுகளிடையே உறவு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக மை மாஸ்டரும் டோவலும் தனியாக சந்தித்து பேசினர். அப்போது பாதுகாப்பு மற்றும் இதர விவகாரங்கள் குறித்து அவர்கள் விரிவானமுறையில்  பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago