முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் கலெக்டர் ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது

புதன்கிழமை, 19 ஏப்ரல் 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில்,  உணவுப் பாதுகாப்புத் துறை செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி   தலைமையில்  நடைபெற்றது.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

கோடை காலமாக இருப்பதால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாக்கெட், பாட்டில் மற்றும் கேன்கள் தரமாக உள்ளதா எனவும் பாக்கெட்டுகளில் தயாரிப்பு முகவரி/ தேதி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பழக்கடைகள் மற்றும் குளிர்பானக் கடைகளில் விற்கப்படும் பழங்கள், குளிர்பானங்கள், குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் ஐஸ், மோர், சர்பத் மற்றும் தண்ணீர் தரமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டுமெனவும், தெருவோர சாலைக்கடைகளில் விற்பனை செய்யப்படும் தேநீர் மற்றும் போண்டா/ பஜ்ஜி போன்ற திண்பண்டங்களின் தரத்தை பரிசோதனை செய்ய வேண்டுமெனவும், நடைபாதையோரம் விற்கப்படும் இறைச்சி/கோழி-மீன் கடைகளை பாதுகாப்பான இடத்தில் வைத்து விற்பனை செய்ய வேண்டுமெனவும், இறைச்சி கடைகளில் விற்கப்படும் இறைச்சிகள், வதைக்கூடத்தில் (ளுடயரபாவநச ர்ழரளந) கால்நடை மருத்துவரின் சான்று பெற்ற பின்னரே இறைச்சிகள் விற்பனை செய்கிறார்களா என ஆய்வு செய்ய வேண்டும். அரசு மற்றும் அரசு சார்ந்த உணவு வணிக நிறுவனங்களான

உணவு பாதுகாப்பு

நியாய விலை கடைகள், உணவு பொருள் சேமிப்பு கிடங்குகள் கூட்டுறவு அங்காடிகள், அம்மா உணவகம் மற்றும் அம்மா மருந்தகங்கள், கோவில் அன்னதான மையங்கள், சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் அரசு உணவு விடுதிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளி சத்துணவு மையங்கள் ஆகியவை உணவு பாதுகாப்பு துறையிடம் உரிமம்/பதிவுச் சான்று பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பண்டிகைக்காலங்களில் மற்றும் கோவில் திருவிழாக்களின்போது இந்து சமய அறநிலையத்துறையைச் சேர்ந்த செயல் அலுவலர்கள் அந்தந்த பகுதியைச் சேர்ந்த உணவுப்பாதுகாப்பு அலுவலர்களை சந்தித்து தெருவோரமாக விற்பனை செய்யும்  கடை ஒப்பந்ததாரர்களிடம் கடைகளை ஏலம் விடும்போது  உணவுப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை  ஏற்படுத்திட வேண்டுமென அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர்  அறிவுறுத்தினார்கள்.

               மேலும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள சிறுவணிகர்கள் முதல் அனைத்து உணவு வணிகர்களும் மற்றும் தனியார் மறுவாழ்வு இல்ல காப்பகங்கள் (ழுசிhயயெபந) உணவு பாதுகாப்புத் துறையிடம் உரிமம்/பதிவுச் சான்று பெற்று வணிகம் செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர்  தெரிவித்தார்கள்.

               இக்கூட்டத்தில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர்                      மரு. தமிழ்செல்வன் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்