முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டம் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறுவது தொடர்பாக முன்னேற்பாடுகள் குறித்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் தலைமையில் நடைபெற்றது.

புதன்கிழமை, 19 ஏப்ரல் 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறுவது தொடர்பாக முன்னேற்பாடுகள்          குறித்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   தலைமையில் இன்று (19.04.2017) நடைபெற்றது.

 இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   தெரிவித்ததாவது,

          ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு 29.04.2017 மற்றும் 30.04.2017 ஆகிய இரு நாட்கள் நடைபெறவுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வு    (தாள் - ஐ மற்றும் தாள் -ஐஐ) அன்று தேர்வு மையங்களுக்கு      பாதுகாப்பு வசதி, தேர்வு மையங்களுக்கு செல்ல போதுமான அளவிற்கு போக்குவரத்து வசதி, தடையில்லா மின்சாரம் வழங்குதல், கழிவறை வசதி, குடிநீர்வசதி      போன்றவை  குறித்து  துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும்,  தேர்வு நாளன்று தேர்வு மையங்களை பார்வையிட வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தேர்வு சுமூகமாக நடைபெற அனைத்து துறை சார்பாக முன்னேற்பாடு நடவடிக்கைகளும் எடுக்க வேண்டுமென சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரை  வழங்கப்பட்டது.

                இக்கூட்டத்தில் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் இர.நர்மதாதேவி, முதன்மை கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பி.ரமேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன்,   காவல்துறை, தீயணைப்புத்துநை அலுவலர்கள், வட்டாட்சியர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்