முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் நகராட்சியின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகள் கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு

புதன்கிழமை, 19 ஏப்ரல் 2017      விழுப்புரம்

விழுப்புரம் நகராட்சி கோடை வெய்யிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்க, நகராட்சியின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளை கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  ஆய்வு செய்தார். குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்து, கலெக்டர் இல.சுப்பிரமணியன், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:விழுப்புரம் மாவட்டத்தில் வருங்காலங்களில் வெய்யிலின் அளவு சராசரி அளவைவிட மிகவும் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.எனவே, பொதுமக்கள் வெய்யிலின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.  மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் வெய்யிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை காக்க, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 120 இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.  மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் ஆகிய 130 இடங்களில் உப்பு சர்க்கரை கரைசல் கலந்த குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பள்ளிக் கூடங்களில் பகல் நேரங்களில் மாணவ மாணவியர்கள் வெய்யிலில் விளையாடாமல், பார்த்துக்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.வெய்யில் அதிகமாக இருக்கும் போது கடுமையான வேலைகளை செய்வதையும், நண்பகல் 12.00 மணி முதல் 4.00 மணி வரை வெய்யிலில் வேலைகளில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும்.  ஊராட்சிப் பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் உச்சி வெய்யில் நேரத்தில் இடைவேலை விட்டு, காலை நேரத்திலேயே பணி செய்ய வேண்டும்.கோடை காலங்கள் முழுவதும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் குடிநீர் தொட்டி அமைத்து, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என கலெக்டர் இல.சுப்பிரமணியன், தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago