முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழியரை கொடுமைப்படுத்திய வழக்கில் அமெரிக்க வாழ் இந்திய சி.இ.ஓ-க்கு அபராதம்

புதன்கிழமை, 19 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

நியூயார்க்  - தன்னிடம் பணிபுரிந்த பெண் ஊழியரை கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக அமெரிக்க வாழ் இந்திய தலைமை செயல் அதிகாரிக்கு 1,35,000 அமெரிக்க டாலரை அபராதமாக செலுத்த அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம் உத்தரவு
தன்னிடம் பணிபுரிந்த பெண் ஊழியரை கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக, 1,35,000 அமெரிக்க டாலரை (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 87 லட்ச ரூபாயை) நஷ்ட ஈடாக வழங்கக் கோரி அமெரிக்க வாழ் இந்திய தலைமை செயல் அதிகாரிக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செயல் அதிகாரி
அமெரிக்காவில் ‘ரோஸ் இன்டர்நேஷனல் அன்ட் ஐ.டி. ஸ்டாபிங்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருப்பவர், ஹிமான்சு பாட்டியா. இந்தியப் பெண். இவர் அங்கு சான்ஜூவான் கேபிஸ்டிரானோ என்ற இடத்தில் வசித்து வருகிறார். இவர் வீட்டில் இந்தியாவை சேர்ந்த ஷீலா நிங்க்வால் என்ற பெண் வேலை பார்த்து வந்தார்.

கொடுமை
இந்தப் பெண்ணை ஹிமான்சு பாட்டியா, ஒரு நாளில் சுமார் 15.5 மணி நேரம் வேலை செய்ய வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வாரத்தில் ஒரு நாள்கூட விடுமுறை கொடுக்காமல் வேலை வாங்கி இருக்கிறார். உணவுடன் மாத சம்பளமாக 400 டாலர் (சுமார் ரூ.26 ஆயிரம்) மட்டுமே தந்துள்ளார். அதே நேரத்தில் வேலைக்காரப் பெண்ணுக்கு உடல் நலமில்லாதபோது, அவரை தன் வீட்டு செல்ல நாய்களுடன் ஹிமான்சு பாட்டியா தூங்க வைத்துள்ளார். அத்துடன் தான் வெளியே செல்கிற நாட்களில் வேலைக்காரப் பெண்ணுக்கு சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்டுள்ளார். அவரது பாஸ்போர்ட்டையும் பறித்து வைத்துள்ளார். சுதந்திரமாக வெளியே செல்லவும் அந்தப் பெண்ணை அனுமதிக்கவில்லை.

நஷ்டஈடு
ஒரு கட்டத்தில் அந்த வேலைக்காரப் பெண், தொழிலாளர் சட்டங்கள் பற்றி இணையதளத்தில் தேடிப்பார்த்தபோது, அதைக் கண்டுபிடித்து, அவரை ஹிமான்சு பாட்டியா வேலையில் இருந்து நிறுத்தி விட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் ஹிமான்சு பாட்டியா மீது அமெரிக்க தொழிலாளர் நலத்துறை கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் அவர் தொழிலாளர் நலச்சட்டங்களை மீறி செயல்பட்டதாக குற்றத்திற்காக 1,35,000 அமெரிக்க டாலரை ஷீலா நிங்க்வாலுக்கு நஷ்ட ஈடாக வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்