அரசு போட்டி பயிற்சி நிலையத்திற்கு புத்தகங்கள் எம்எல்ஏவிடம் வழங்கப்பட்டது

புதன்கிழமை, 19 ஏப்ரல் 2017      வேலூர்
Dt20 AKM POTO 01

அரக்கோணத்தில் உள்ள அரசு போட்டி பயிற்சி நிலையத்திற்கு ரூ20ஆயிரம் மதிப்புடைய உயர் தரமான புத்தகங்கள்; பலவற்றை அம்மையப்பர்; ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனம் அன்பளிப்பாக வழங்கியதை அரக்கோணம் எம்எல்ஏ ரவி பெற்று கொண்டார் வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரின் எல்லை. எஸ்ஆர் கேட் அருகில் நகராட்சிக்கு சொந்தமான தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்திற்குள் தமிழ்நாடு அரசு இலவச போட்டி தேர்வு பயிற்சி மையம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த மையமானது சட்ட மன்ற உறுப்பினர் சு.ரவி முயற்சியால் மாவட்ட வேலை வாய்ப்பு துறையின் சார்பில் செயல்பட்டு வருகிறது.இங்கு பல்வேறு அரசு தேர்வுகள் எழுத பயிற்சி பெறும் மாணவ, மாணவர்களின் சந்தேகங்கள் தீர்க்க தேவையான புத்தகத்துடன் கூடிய நூலகம் சில தினங்களுக்கு முன்னதான் திறக்கப்பட்டது. திறக்கபட்ட நூலகத்திற்கு போதிய அளவில் புத்தகங்கள் இருப்பினும். தமிழ்நாடு அரசு இலவச போட்டி தேர்வு பயிற்சி மைய நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்கி தரும்படி திருத்தணி நெடுஞ்சாலையில் உள்ள அம்மையப்பர்; ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தாரிடம எம்எல்ஏ சு.ரவி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் ரூ20 ஆயிரம் மதிப்புடைய நூற்றுகணக்கான உயர் தரமான விலை உயர்ந்த புத்தகங்களை இந்நிறுவனம் வழங்க முன் ;வந்தது. இதற்கான எளிய நிகழ்வில் ஆடை தயாரிக்கும் நிறுவனத்தின் நிர்வாக உதவியாளர் பழனிவேல், மனிதவள மேம்பாட்டு அலுவலர் கீதாஞ்சலி, மற்றும் சுகாதார அலுவலர் ராஜேஸ்வரி கணினி பொறுப்பாளர் காளிராஜ் ஆகியோர் கல்து கொண்டு புத்தகங்களை அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவியிடம் ஒப்படைத்தனர். அப்பொழுது அதிமுக கட்சியைச் சேர்ந்த சாலை பழனி, தணிகைபோளுர் பிரகாஷ், ஆனந்தன், கிருஷ்ணசாமி, அசமந்தூர் பானு, நெமிலி திருமலை, வடமாம்பாக்கம் மோகன், அரக்கோணம் நகரம் பாண்டியன், பாளையம், கீழ்குப்பம்அருள், உள்ளிட்டவர்களுடன், பயிற்சி பெறும் மாணவர்களும்; கலந்து கொண்டனர்.

 


 

இதை ஷேர் செய்திடுங்கள்: