முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் தொழிற்நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்தி தங்களுடைய சமுதாய பங்களிப்பை ஆற்றிட வேண்டும்: கலெக்டர் சி.அ.ராமன், வேண்டுகோள்

புதன்கிழமை, 19 ஏப்ரல் 2017      வேலூர்
Image Unavailable

 

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் சித்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒர்த் அறக்கட்டளையில் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு மற்றும் உரிமைகள் வழங்கிட தொழிற்நிறுவனங்களுக்கான உணர்வூட்டும் பயிற்சி வகுப்பினை கலெக்டர் சி.அ.ராமன், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசியதாவது:- தொழிற்சாலைகள் நிறைந்த வேலூர் மாவட்டத்தில் தொழிற்நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து துறைகளிலும் சம உரிமை வழங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனடிப்படையில் தனியார் தொழிற் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் குறைகளுக்கு ஏற்றார் போல் பணிகளை வழங்க வேண்டும். இவற்றை கடைபிடிக்க தொழிற்நிறுவனங்களுக்கு இந்த உணர்வூட்டும் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் அடுத்த ஆண்டு சிப்காட் தொழிற்பேட்டை அமைந்துள்ள பகுதிகளில் நடத்தப்படவேண்டும். இவ்வாறு நடத்தப்பட்டால் இன்னும் பல தொழிற்நிறுவனங்கள் இதுபோன்ற பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கைக்கு வித்திட முடியும். மாற்றுத்திறனாளிகள் சாதாரண பொதுமக்களை காட்டிலும் மாற்றுத் திறன் கொண்டவர்களாக உடல் ஊணத்துடன் இருப்பவர்கள். ஆனால் உடல் குறைபாடுகளை தாண்டி பல்வேறு திறமைகளை ஆரோக்கிய மனிதனை விட அதிக அளவு திறமை கொண்டவர்களாக உள்ளனர். எடுத்துக்காட்டாக சேலத்தை சார்ந்த மாற்றுத்திறனாளி இளைஞன் மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்று உலக அளவில் இந்தியாவின் பெருமையை நிலை நிறுத்தியதே ஆகும். தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவிகிதம் அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு செய்துள்ளது. அவற்றை கண்காணிக்க அரசு முதன்மை செயலாளர் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு புதுவாழ்வு, மகளிர் திட்டம், வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாகவும் இவர்களுக்கு அரசு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறது. இதுபோல பல பன்னாட்டு மற்றும் பெரிய தொழிற்நிறுவனங்களும் படித்த மாற்றுத்திறனாளிகளுக்கும் உகந்த வேலைவாய்ப்பினை வழங்க நடவடிக்கை எடுத்து அவர்களின் வாழ்க்கைக்கும் உதவிட வேண்டும். ஏனென்றால் ஒரு மாற்றுத்திறனாளியை பராமரிக்க அவருடைய குடும்பமும் பெற்றோர்களும் அதிக சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்தியாவில் கடந்த 2011 புள்ளி விவரப்படி 26 மில்லியன் மாற்றுத்திறனாளிகள் இருந்தனர். அவர்களில் 45 சதவிகிதம் பேர் காது கேளாத பேச இயலாதவர்கள் ஆவர். இந்த 45 சதவிகித்தினர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்புகளை தொழிற்நிறுவனங்கள் அளிக்க வேண்டும். மாற்றுத்தினாளிகளுக்கு இந்தியாவில் ஒரு சில தொண்டு நிறுவனங்கள் பெரிய அளவில் செயல்படும் ஒரே நிறுவனமான ஒர்த் அறக்கட்டளை மாற்றுத்திறனாளிகளுக்கு பல ஆண்டுகளாக செயல்பட்டு உதவிகளையும் அவர்களுக்கு தன்னம்பிக்கையும் அளித்து வருகிறது. ஆகவே இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள தொழிற்நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் தன்னம்பிகையும் தனியாக சமுதாயத்தில் ஊக்கத்திறனை அளிக்கும் வகையில் அவர்களுக்கு நிறுவனத்தில் அவர்களின் திறமைக்கு ஏற்றாற்போல் பணி ஒதுக்கீடுகள் அளித்து தங்களின் சமுதாய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெ.செந்தில்குமாரி, புதுவாழ்வு திட்ட மேலாளர் சம்பத்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் கருணாகரன், ஒர்த் அறக்கட்டளை தலைமை செயல் அலுவலர் ஆர்.கார்த்திகேயன், மண்டல மேலாளர் மற்றும் ஒர்த் மாற்றுத்திறனாளி மறுவாழ்வு பள்ளி தாளாளர் செல்வி.விண்ணரசி கீதா, தொழில் மைய திட்ட மேலாளர் அசோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago