முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயற்கை விவசாயத்தினால் விளைவிக்கப்பட்ட விவசாயப் பொருட்கள் ஏற்றுமதிக்கு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது: கலெக்டர் வா.சம்பத், தகவல்

புதன்கிழமை, 19 ஏப்ரல் 2017      சேலம்
Image Unavailable

சேலம் மாவட்டத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் தோட்டக்கலைத்துறை இணைந்து உழவர் பெருமக்கள் வாழை சாகுபடியில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை அறிந்து அதிக மகசூல் பெற்றிடும் வகையில் நேற்று (19.04.2017) வாழை சாகுபடியாளர்கள் விழிப்புணர்வு கருத்தரங்கினை கலெக்டர் வா.சம்பத், தொடங்கி வைத்தார். கருத்தரங்கினை தொடங்கி வைத்த கலெக்டர் பேசியதாவது. தமிழக முதல்வர் விவசாயிகளின் பொருளாதார மேம்பட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார்கள். அந்த வகையில் வாழை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும், விற்பனை வாய்ப்புகள் மற்றும் மதிப்பூட்டிய உணவு பொருட்கள் தயாரிப்பு குறித்தும் சாகுபடியாளர்கள் மற்றும் வேளாண்மை விஞ்ஞானிகளின் கருத்தரங்கு தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் நுகர்வோர்கள் என்ன விரும்புகிறார்களோ அவற்றை உற்பத்தி செய்து கொடுப்பதற்க்கு உற்பத்தியாளர்கள் தயாராக இருக்கவேண்டும். வாழ சாகுபடியில் நமது சிந்தனை, கண்ணோட்டம் மற்றும் செயல்பாடுகளில் மாறுதல் தோன்ற வேண்டும். சில ஆண்டுகளாக திசு வாழை செடிகளை சாகுபடியில் அதிகப்படுத்தி உள்ளது ஒரு முக்கியமான திருப்பமாகும். மத்திய மாநில அரசுகள் வாழை சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கத்தில் பல்வேறு மானியத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் அதிக அளவில் காற்று வீசும் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, விவசாயப் பெருமக்கள் பிரதம மந்திரியின் பசல் பீமா யோஜனா திட்டத்தில் பயிர்க்காப்பீடு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.சரியான விருப்பமான ரகங்கள் சாகுபடிக்கு தேர்ந்தெடுப்பது வியாபாரம் சிறக்க உதவும். உள்ளூர் சந்தையில் நுகர்வோர் எந்த ரகங்களில் காய்கள் அல்லது பழங்களை விரும்புகிறார்கள் என்று தெரிந்து அந்த ரகங்களின் சாகுபடியில் அதிக நாட்டம் செலுத்த வேண்டும். இதே போன்று ஏற்றுமதி சந்தைகளில் விற்பனைக்கு ஏற்ற ரகங்கள் எவையென கண்டறிந்து சரியான ரகங்களை சாகுபடி செய்ய வேண்டும். இயற்கை விவசாயத்தினால் விளைவிக்கப்பட்ட விவசாயப் பொருட்கள் ஏற்றுமதிக்கு மிகுந்த ஏற்றம் காணப்படுகிறது. தற்பொழுது வாழை காயாக அல்லது கனியாக விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் வாழைக்காய் மற்றும் வாழைப்பழத்திற்கு மதிப்பேற்றி பதனிடப்பட்ட பொருட்களான பழச்சாறு, பழக்கூழ், பழ மிட்டாய், ஜாம், உலர்ந்த துண்டுகள், சிப்ஸ், மாவு போன்றவை தயாரித்து விற்பனை வாய்ப்புகளை அதிகரிக்கலாம். வாழை சார்ந்த பல்வேறு பதனிடும் தொழிற்சாலைகள் அமைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் கிரரமபுறத்தில் வேலை வாய்ப்புகள் பெருகி பொருளாதார முன்னேற்றம் ஏற்படலாம். வாழை பழங்களில் இருந்து பல்வேறு வகையான பதப்படுத்தப்பட்ட மதிப்பூட்டக்கூடிய பொருட்களை தயாரிப்பதற்கு உண்டான பயிற்சிகளை தர தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் உள்ள கல்லூரிகளிலும், ஆராய்ச்சி நிலையங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, விவசாயப் பெருமக்களும், வாழை சாகுபடியாளர்களும், ஏனையோரும் இக்கூட்டத்தினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு வாழை சாகுபடியில் பபன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.இந்த கருத்தரங்கில் வேளாண்மை இணை இயக்குநர் சௌந்தரராஜன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பிரபு, தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் சங்க செயலாளர் ஜி.அஜீத்தன், தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் சங்க தலைவர் ஏ.பி.கருப்பையா, தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக பேராசிரியர் முனைவர்.கே.சூரியநாதசுந்திரம் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம் மாவட்டங்களை சார்ந்த விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago