முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறந்த சுற்றுலா தளமாக மதுரை விளங்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் - அபூர்வ வர்மா தகவல்

புதன்கிழமை, 19 ஏப்ரல் 2017      மதுரை
Image Unavailable

மதுரை.-  சுற்றுலா தளமாக விளங்கும் மதுரையை சுற்றியுள்ள சிறப்புமிக்க இடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ், தலைமையில், சுற்றுலாத்துறை அரசின் முதன்மைச்செயலாளர் அபூர்வ வர்மா,  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 இந்த ஆய்வின் போது சுற்றுலாத்துறை அரசின் முதன்மைச்செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் மதுரை வண்டியூரில் அமைக்கப்படவுள்ள பூங்கா மற்றும் நடைபாதை தளங்களையும், பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் மேற்கொள்ளப்படவுள்ள நீர்நிலைகள் சுத்தப்படுத்தும் பணியினையும், புதிதாக கட்டப்படவுள்ள குளியலறை மற்றும் கழிவறைகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தனர். பின்னர், திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் பூங்காவை பார்வையிட்டு, அங்குள்ள பொதுமக்களிடம் பூங்காவினை மேம்படுத்தும் பொருட்டு, தேவைப்படும் வசதிகள் குறித்து கேட்டறிந்தனர். 
 இந்த ஆய்வின் போது காவல்துறை ஆணையாளர்            சைலேஷ் குமார் யாதவ்,இ.கா.ப., மாநகராட்சி ஆணையாளர்           சந்தீப் நந்தூரி,இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் பச்சையப்பன், மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் நடராசன், திருப்பரங்குன்றம் கோயில் துணை ஆணையர் செல்லத்துரை, மாவட்ட சுற்றுலா அலுவலர் பாலமுருகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்