முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

புதன்கிழமை, 19 ஏப்ரல் 2017      விளையாட்டு
Image Unavailable

மான்ட்கார்லோ : மொனாக்கோவில் நடந்து வரும் மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் நோவக் ஜோகோவிச் பிரான்சின் ஜிலெஸ் சிமோனை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

களிமண் தரை

பிரெஞ்ச் ஓபனுக்கு முன்னோட்டமாக மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இது களிமண் தரையில் நடக்கும் போட்டியாகும். இதில் பங்கேற்றுள்ள 2-ம் நிலை வீரரும், முன்னாள் சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) நேரடியாக 2-வது சுற்றில் பிரான்சின் ஜிலெஸ் சிமோனை நேற்று முன்தினம் எதிர்கொண்டார்.

போராடி வெற்றி

2 மணி 31 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான இந்த மோதலில் ஜோகோவிச் 6-3, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று 3-வது சுற்றை எட்டினார். மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 56-வது இடம் வகிக்கும் பிரான்சின் அட்ரியன் மானரினோ 6-7 (3), 6-2, 6-3 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள சக நாட்டவர் சோங்காவுக்கு அதிர்ச்சி அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்