முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 3063.081 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன: கலெக்டர் மு.ஆசியா மரியம் தகவல்

புதன்கிழமை, 19 ஏப்ரல் 2017      நாமக்கல்
Image Unavailable

சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி நாமக்கல் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்றுவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (19.04.2017) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்து பேசும் போது தெரிவித்ததாவது, சீமைக்கருவேல மரங்களால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகின்றது. பூமிக்கடியில் 75 அடி ஆழம் வரை உள்ள நீரையும் சீமைக்கருவேல மரங்கள் உறிஞ்சி விடுகிறது. இந்த மரத்தின் விதைகள், காய்கள் எதுவும் உபயோகப்படுவதில்லை. எதற்குமே பயன்படாத இயற்கை வளத்தை பாதிக்கின்ற சீமைக்கருவேல மரங்களை அகற்றிட வேண்டுமென மாண்பமை சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிப்பகுதிகள், நகராட்சிப்பகுதிகள், பொதுப்பணித்துறை, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரத்துறை), நெடுஞ்சாலைத்துறை மற்றும் இதர இடங்களிலுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகின்றது. மேலும் இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில் துண்டுப்பிரசுரங்கள், ஆட்டோக்கள் மூலம் விளம்பரங்கள், தண்டோரா, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள், மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணி, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களும் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு தங்களது முழு பங்களிப்பை அளித்திட வேண்டுமென தொடர்ந்து கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட குளங்களில் 1328.230 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்களில் இதுவரை 547.500 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. ஊராட்சிப்பகுதிகளில் உள்ள குளங்களில் 1409.120 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்களில் இதுவரை 683.380 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. பொது ஃ புறம்போக்கு இடங்களில் 481.370 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்களில் இதுவரை 337.831 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. தனியார் இடங்களில் 738.592 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்களில் இதுவரை 339.490 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன.மேலும் பொதுப்பணிப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகளில் 3618.000 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்களில் இதுவரை 652.700 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள ஆறுகளில் 1437.000 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்களில் இதுவரை 190.140 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் 110.900 கி.மீட்டர் நீளத்தில் இருந்த சீமைக்கருவேல மரங்களில் இதுவரை 104.000 கி.மீட்டர் நீளத்திலிருந்த சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் 41.700 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் இதுவரை 4.560 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. நகராட்சிப்பகுதிகளில் 148.090 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் இதுவரை 131.650 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. பேரூராட்சிப் பகுதிகளில் 118.060 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் இதுவரை 71.830 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன என்றார்.இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வி.சி.மாலதி, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் இரா.பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் எஸ்.பாலகிருஷ்ணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) க.சந்திரசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) லீலாகுமார் மற்றும் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago