சோபனூர் கிராமத்தில் 320 பயனாளிகளுக்கு ரூ.24 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார்

புதன்கிழமை, 19 ஏப்ரல் 2017      கிருஷ்ணகிரி
3

கிருஷ்ணகிரி மாவட்டம், தட்ரஹள்ளி தரப்பு சோபனூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அருண் வரவேற்றுரையாற்றினார்.பின்பு துறை வாரியாக வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தாட்கோ, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தும் திட்டங்கள் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் 0குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவர்கள் மூலமாக விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது.பின்னர் கலெக்டர் பேசும் பொழுது : மாவட்ட நிர்வாகம் சார்பாக மாதம் ஒரு முறை மக்களைத் தேடி கிராமபுறங்களில் வாழும் மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் அவர்களுக்கு அரசின் திட்டங்களை வழங்குவதற்காக இதுபோன்ற மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்பட்டுவருகிறது. வறட்சி காலத்தில் மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய குடிநீரை விநியோகம் செய்து வருகிறோம். மாவட்டத்தில் உள்ள ஆழதுளை கிணறுகள் உள்ள இடத்தில் நிலத்தடி நீர் சேமிப்பு பணிகளை மேற்கொள்ளபட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் நீர்வரத்துள்ள இடங்களில் தடுப்பணைகளும் அமைக்கப்பட்டு வருகிறது.தமிழக அரசு நீர்வள ஆதாரத்தை உயர்த்தும் வகையிலும், எதிர்காலத்தில் நீரின் சேமிப்பு ஆகிய குறித்தும் ஏரிகள்,நீரோடைகள், நீர்வழப்பாதைகள் ஆகிய இடங்களில் தூர்வாரும் பணிகளையும் தடுப்பணைகள் அமைக்கும் பணிகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராமபுற மாணவ,மாணவியர்கள் தேர்வு பின்பு காலத்தின் அறுமை கருதி பொழுதுபோக்காக இல்லாமல் , கணிணி பயிற்சி, தட்டச்சுப்பயிற்சி மற்றும் கல்வி சார்ந்த பயிற்சிகளை கற்றுக்கொண்று, நேரத்தை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதே போல் ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பது மிகவும் அவசியம் என பேசினார்.மேலும் இன்றுமட்டும் சோபனூர் கிராமத்தில் சமூகநலத்துiயின் சார்பில்188 - பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகையும், இருளர் சாதிச் சான்று 20 - நபர்களுக்கும், மின்னனு குடும்ப அட்டை 73 பயனாளிகளுக்கும், உட்பிரிவு பட்டா மாறுதல் 13 பயனாளிகளுக்கும், பட்டா மாறுதல் 16 பயனாளிகளுக்கு என மொத்தம் 320 பயனாளிகளுக்கு 24 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதனை பெற்று பயனடைய வேண்டும் என மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் பேசினார்.இந்நிகழ்ச்சியில் தனி துணை கலெக்டர் ( சமூக பாதுகாப்பு திட்டம் வசந்தா, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சங்கரன், கலெக்டர் நேர் முக உதவியாளர் (வேளாண்மை) பானுமதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.சேகர், உதவி ஆணையர் ஆயம் முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன், பட்டு வளர்ச்சித் துறை துணை இயக்குநர் வீரராகவன், உதவி இயக்குநர் (கால்நடை பராமரிப்புத் துறை ), ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் புஷ்பலதா, தனி வட்டாட்சியர் ( சமூக பாதுகாப்புத்திட்டம்) ஜே.சி.முருகன், வட்ட வழங்கல் அலுவலர் முருகன், மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் தனி வட்டாட்சியர் மோகனசுந்தரம் நன்றியுரையாற்றினார்.

 


இதை ஷேர் செய்திடுங்கள்: