தனது சினிமா படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்துக்கு சச்சின் நன்றி

புதன்கிழமை, 19 ஏப்ரல் 2017      சினிமா
sachin-rajini 2017 4 19

மும்பை : தனது சினிமா படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்துக்கு சச்சின் நன்றி தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் வாழ்த்து

சச்சின் தெண்டுல்கர்  '' சச்சின் பில்லியன் ஏ ட்ரீம்ஸ்'' என்ற திரைப்படம் மே 26-ம் தேதி திரைக்கு வருகிறது. இதற்கான டிரைலர் ஏற்கனவே வெளியாகி  ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இதன் வெற்றிக்கு தனது ட்விட்டரில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து இருந்தார். பதிலுக்கு ரஜினிக்கு நன்றி தெரிவித்து சச்சினும் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.


சச்சின் நன்றி

''நன்றி தலைவா! தமிழில் இந்தப் படத்தை நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்'' என்று சச்சின் தெரிவித்துள்ளார். சச்சினின் இந்தப் படம் தமிழ், மராத்தி, இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் வெளி வருகிறது. இதேபோல கடந்தாண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் திரைப்படம் திரைக்கு வந்திருந்தபோதும், சென்னையில் ரஜினியை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் இல்லத்தில் வைத்து டோனி நேரடியாக சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: