முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தடுமாற்றம்: டோனிக்கு ஆஸி. முன்னாள் வீரர் வார்னே ஆதரவு

புதன்கிழமை, 19 ஏப்ரல் 2017      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனி தடுமாறுவதாக ஒரு சிலர் விமர்சனம் செய்துள்ள நிலையில் அவருக்கு ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே ஆதரவு தெரிவித்துள்ளார்.

அற்புதமான வீரர்

வார்னே தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் டோனி ஒரு தரம் வாய்ந்த அற்புதமான வீரர். மிகச்சிறந்த கேப்டனும் கூட. மற்றவர்களுக்கு உந்துசக்தியாக இருக்கிறார். அவர் யாருக்காகவும், எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று கூறியுள்ளார்.  டோனி இந்த சீசனில் 5 ஆட்டங்களில் 61 ரன்கள் மட்டுமே எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்