முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியா ஏவுகணை சோதனை எதிரொலி: ஜப்பானுக்கு உரிய பாதுகாப்பு அமெரிக்க துணை அதிபர் உறுதி

புதன்கிழமை, 19 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

டோக்கியோ  - வாரந்தோறும் ஏவுகணை சோதனை நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ள நிலை யில், ஜப்பானுக்கு தொடர்ந்து பாதுகாப்பு வழங்கப்படும் என்று அமெரிக்கா மீண்டும் உறுதி அளித்துள்ளது.

டோக்கியோவில் மைக் பென்ஸ்
தென்கொரிய பயணத்தை முடித்துக்கொண்ட  அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றடைந்தார். அங்கு அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவைச் சந்தித்துப் பேசினார். அப்போது, வடகொரியாவால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்று அபே வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

பாதுகாப்பு கொடுக்கப்படும்
பின்னர் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் கூறியபோது, “அமெரிக்கா, ஜப்பான் இடையிலான உறவு வடகிழக்கு ஆசிய பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கான மைல்கல் ஆகும். இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு உறவு தொடர்ந்து நீடிக்கும். வடகொரியாவால் ஜப்பானுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு வழங்கப்படும். இந்தப் பிரச்சினைக்கு அமைதியான முறையிலும் ராஜதந்திர முறையிலும் தீர்வு காண முக்கியத்துவம் கொடுக்கப்படும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்