முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

வியாழக்கிழமை, 20 ஏப்ரல் 2017      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னணி ஆல் ரவுண்டரான பல்க்னெருக்கு இடம் கிடைக்கவில்லை. ஸ்டார்க், லின் இடம்பிடித்துள்ளனர்.

ஜூன் 1 முதல் ...

இங்கிலாந்தில் ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. ஐ.சி.சி.யால் இந்தத் தொடர் உலகக்கோப்பைக்கு நிகரானது என்பதால் அனைத்து அணிகளும் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற நினைப்பில் உள்ளது. கடந்த முறை நடைபெற்ற தொடரில் டோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.

15 பேர் அணி

இரண்டு முறை ஆஸ்திரேலிய அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றியுள்ளது. 3-வது முறையாக அந்த அணி கோப்பையை கைப்பற்றும் எண்ணத்தில் உள்ளது. இதற்கேற்ற வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அறிவித்துள்ளது. இந்திய டெஸ்ட் தொடரின்போது காயத்தால் விலகிய மிட்செல் ஸ்டார்க், ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகிய கிறிஸ் லின் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பால்க்னெர் இல்லை

முன்னணி ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் பால்க்னெருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அதேபோல் ஷேன் மார்ஷ், கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், ஜார்ஜ் பெய்லி போன்றோருக்கும் இடம் கிடைக்கவில்லை.

ஆஸ்திரேலிய அணி வீரர்கள்

1. ஸ்டீவன் சுமித் (கேப்டன்), 2. வார்னர், 3. ஆரோன் பிஞ்ச், 4. மேக்ஸ்வெல், 5. மேத்யூ வடே, 6. கிறிஸ் லின், 7. ஹென்றிக்ஸ், 8. கம்மின்ஸ், 9 ஹாஸ்டிங்ஸ், 10. ஹசில்வுட், 11. டிராவிஸ் ஹெட், 12. பேட்டின்சன், 13. மிட்செல் ஸ்டார்க், 14. ஸ்டோய்னிஸ், 15. ஆடம் ஜம்பா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago