முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்புத்தூர் மாவட்டம்

வியாழக்கிழமை, 20 ஏப்ரல் 2017      கோவை

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் வட்டத்தில் வருவாய் துறை சார்பாக தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் மின்னனு குடும்ப அட்டைகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன்  அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில்  தமிழ்நாடு சட்டப்பேரவைத்தலைவர் ப.தனபால்  நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில்

          ஏழை எளிய, அடிமட்ட மக்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற உயரிய நோக்கில்  அம்மா  பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வழங்கிவந்தார்கள் இன்றும் அவர்களின்  வழியில் நடக்கின்ற  அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கி வருகிறது. அதனடிப்படையில் அவினாசி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் வழங்கி இந்த தொகுதியினை சிறந்த சட்டமன்ற தொகுதியாக மாற்றிடும் வகையில் உங்களுக்காக முனைப்புடன் செயல்பட்டு தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளின்படி  செயலாற்றி வருகிறேன். அதிலும் குறிப்பாக இப்பகுதி மக்கள் என்னிடம் அவினாசி அத்திக்கடவு திட்டத்தை வழியுறுத்தியதன் அடிப்படையில் மீண்டும்  அம்மா அவர்களிடம் தேர்தல் முடிந்ததும் இத்திட்டத்தின் அவசியம் குறித்து எடுத்துரைத்து அனுமதி பெற்றுதுடன் மத்திய அரசிற்கு நிதி ஒதுக்கீடு பெற கருத்துரு அனுப்பியதோடு விட்டுவிடாமல் தமிழக அரசு பணிகள் மேற்கொள்ள முதற்கட்டமாக 2017-2018 நிதியாண்டில் ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் மேற்கொள்ள இதே பகுதியில்  தமிழக முதலமைச்சர்  தலைமையில்  அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

 மேலும், அத்திக்கடவு அவினாசி திட்டம் பணிகள் மேற்கொள்ள ரூ.3523 கோடிக்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் வறட்சி பகுதிகளிலுள்ள ஏரிகள் மற்றும் குட்டைகளில் தண்ணீர் நிரப்பி நிலத்தடிநீர் செறிவுட்டப்பட்டு பாசன வசதிகளை மேம்படுத்தப்படும்.

 வறட்சி காலங்களில் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்ககைள் மேற்கொள்ளப்பட்டு சீரான முறையில் குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது. மேலும், நிரந்தர தீர்வாக மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னூர் வழியாக அவினாசிக்கு குடிநீர் வழங்க மூன்றாவது கூட்டு குடிநீர்த்திட்டம் அமைக்க திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இத்திட்டப்பணிகளானது ஒன்றறை ஆண்டுகள் முடிக்கப்பட்டு அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் சீரான முறையில் வழங்கப்படும். இதுபோன்ற மக்களின் தேவைக்கான அனைத்து திட்டங்களும் உரிய முறையில் சரியான நேரத்தில் செய்து தரப்படும்.

மேலும், அன்னூர் வட்டாட்சியர் கட்டட பணிகள் நடைபெற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அன்னூர் பேரூராட்சி பேருந்து நிலைய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் புற வழிச்சாலை அமைக்க நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இன்று நடைபெற்ற விழாவில் வீட்டுமணை பட்டா 173 பயணாளிகளுக்கு ரூ.13.49 இலட்சம் மதிப்பிலும், பட்டா மாறுதல் 15 பயணாளிகளுக்கும், பழைய குடும்ப அட்டைகளுக்கு பதிலாக 500 குடும்ப அட்டைதாரர்களுக்கு 500 மின்னனு குடும்ப அட்டைகளும், சமூக  பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 25 பயணாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரண உதவித்தொக 1 பயணாளிக்கு ரூ.10,000-மும் திருமண உதவித்தொகை 3 பயணாளிகளுக்கு ரூ.26,000-மும், 92 மாணவ மாணவியர்களுக்கு ரூ.2.15இலட்சம் மதிப்பில் கல்வி உதவித்தொகையும், வேளாண்மைத்துறையின் மூலம் டிரக்டர் மற்றும் உழவு உபகரணங்கள் மானியமாக  ரூ.10.58 இலட்சம்  மதிப்பில் 9 பயணாளிகளுக்கும், பிற்படுத்ப்பட்டோர் நலத்துறையின் மூலம் சலவைப்பெட்டி, தையல் இயந்திரம் ரூ.39,050 மதிப்பில்  10 பயணாளிகளுக்கும் என மொத்தம் 828 பயணாளிகளுக்கு ரூ.27.23 இலட்சம் மதிப்பில் அரசின் நலத்திட்டம் வழங்கப்படுகின்றது.

மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் மேல்கதவக்கரை, காக்காப்பாளையம், நல்லக்கவுண்டம்பாளையம், அருவங்காடு நால்ரோடு, பு.சு.பு கல்லூரி ஆகிய குக்கிராமங்களுக்கும் போக்குவரத்து வசதி ஏற்படுத்தும் விதமாக 6 புதிய   வழித்தடங்களை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற மக்களின் அடிப்படை வசதிகளை தமிழ்நாடு அரசின் மூலம்  தொடர்ந்து செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால்  பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் சின்னசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணமூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சென்னியப்பன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலர்  சுரேஷ், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர்  இ.கோவிந்த ராஜ், துணை மேலாளர் (வணிகம்) சாய் கிருஷ்ணன், அன்னூர் வட்டாட்சியர்  ராஜன் மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago