ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.65.22 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வியாழக்கிழமை, 20 ஏப்ரல் 2017      ஈரோடு

ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.65.22 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஊராட்சி ஒன்றியம் இச்சிப்பாளையம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.75 இலட்சம் மதிப்பீட்டிலும், தமிழ்நாடு ஊரக உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.37.73 இலட்சம் மதிப்பீட்டில்  அமைக்கப்பட்டு வரும் தார்சாலை பணிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது தரமான பொருட்களை கொண்டு தார்சாலை அமைக்கப்பட்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடவேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

 ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஊராட்சி ஒன்றியம் கொந்தளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.4.74 இலட்சம் மதிப்பீட்டில் வீரசங்கிலி குளத்தினை தூர்வாரும் பணியினை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது  தூர்வாரும் மண்ணினை கரையின் மேற்புறம் கொட்டப்பட்டு கரையினை பலப்படுத்துவதோடு, குளத்தின் உள்புறம் முழுவதுமாக தூர்வாரப்பட்டு சமப்படுத்தவேண்டுமென ஊரக வளர்ச்சி துறை அலுவலர் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


பின்னர் வள்ளிபுரம் ஊராட்சி கோவில்புதூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தினை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்  அவர்கள பார்வையிட்டு ஆய்வு செய்து இச்சேவை மைய கட்டிடத்தின்  பயன்பாட்டினையும், பொதுமக்களுக்கு பயனுள்ளதாக செயல்படும் விதத்தினையும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களிடம் மாவட்ட கலெக்டர்  கேட்டறிந்தார்.

                இந்த ஆய்வின்போது கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) ஜி.உமா, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) பி.சாந்தி, உதவி பொறியாளர்கள் எம்.விஜயகுமார், எஸ்.பர்கத், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: