அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் - கலெக்டர் சிவஞானம். துவக்கி வைத்தார்.

வியாழக்கிழமை, 20 ஏப்ரல் 2017      விருதுநகர்
vnr collecter

   விருதுநகர்.-விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து செய்தியாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான இலவச மருத்துவ முகாம்  விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது. இம்முகாமினை மாவட்ட கலெக்டர் சிவஞானம். குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து தெரிவித்ததாவது :-
 தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில்; பத்திரிகையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பத்திரிகையாளர்களுக்கு மாவட்ட அளவில் இலவச மருத்துவ முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள்  மற்றும் குடும்பத்தினர் ஆகியோர்களுக்கு இலவச மருத்துவ முகாம் விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில், புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காலை 9.30 மணி முதல் நடைபெற்ற இம்மருத்துவ முகாமில், பொது மருத்துவ பரிசோதனை, இரத்த பரிசோதனை, கல்லீரல் மற்றும் குடலியல் பரிசோதனை, மூட்டுவலி மற்றும் எலும்பு முறிவு சிகிச்சை, சர்க்கரை அளவு கண்டறிதல், கண் சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை, சிறுநீரக சிகிச்சை, இருதய நோய் சிகிச்சை, குழந்தைகள் நல சிகிச்சை, பெண்களுக்கான கர்பப்பை வாய் பரிசோதனை, மார்பக புற்றுசோய் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு வகையான மருத்துவ பரிசோதனைகளும் மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. மேலும் பரிசோதனைகளில் தீவிர நோய் தொற்று கண்டறியப்பட்டால் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 
 இம்முகாமில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை பெற்று பயன்பெற்றனர் என மாவட்ட கலெக்டர் சிவஞானம்.இ.ஆ.ப.,   தெரிவித்துள்ளார்.
 இம்முகாமில், இணை இயக்குநர் (மருத்துவம்) செந்தில்குமார் அவர்கள் தலைமையிலான, துணை இயக்குநர்கள் நிர்மலாதேவி (காசநோய்), அமுதா (தொழுநோய்),  கண்காணிப்பாளர் துரைராஜ், அறுவை சிகிச்சை மருத்துவர் முருகவேல், மருத்துவபிரிவி மருத்துவர் அன்புவேல், இருதய பிரிவு மருத்துவர் நாகசுந்தரம், எலும்பு முறிவு மருத்துவர் ஜெகநாதன், மகப்பேறு மருத்துவர் ஆயிஷாகனி, கண் மருத்துவர் செந்தில் செல்வி, காது, மூக்கு, தொண்டை மருத்துவர் மகேஸ்வரன், வாதநோய் மருத்துவர் வித்யா, பல் மருத்துவர் மறைமலைமணி, குழந்தைகள் மருத்துவர் அரவிந்த்பாபு ஆகிய மருத்துவர்களை கொண்ட சிறப்பு மருத்துவ குழுவின் மூலம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முகாமில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.இரா.ஜெயஅருள்பதி   கலந்து கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: