முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் ரூ.5.65 கோடியில் புதிய சுத்திகரிப்பு தொழிற்சாலை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

வியாழக்கிழமை, 20 ஏப்ரல் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் உள்ள அரசு உப்பு நிறுவனத்தில் ரூ.5 கோடியே 65 லட்சம் மதிப்பிலான புதிய சுத்திகரிப்பு தொழிற்சாலையினை அமைச்சர்கள் சம்பத் மற்றும் டாக்டர் மணிகண்டன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
  ராமநாதபுரம் மாவட்டம், மாரியூர் வாலிநோக்கத்தில் உள்ள தமிழ்நாடு உப்பு நிறுவன வளாகத்தில்  தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன்  ஆகியோர், தமிழ்நாடு அரசு மற்றும்  டாடா டிரஸ்ட் ஒருங்கிணைந்து ரூ.5.65 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உப்பு சுத்திகரிப்பு தொழிற்சாலையினை துவக்கி வைத்தார்கள். தமிழ்நாடு உப்புநிறுவன மேலாண்மை இயக்குநர் ஹர்சஹாய் மீனா திட்ட விளக்கவுரையாற்றினார். மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தலைமையுரையாற்றினார். விழாவில், அமைச்சர் சம்பத் பேசியதாவது:- தமிழ்நாடு அரசு, தமிழகத்தில் பொருளாதார நிலையில் பின்தங்கிய மாவட்டமாக விளங்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடும் விதமாக வாலிநோக்கத்தில் தமிழ்நாடு உப்பு நிறுவனம் 1974 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.  அரசுக்கு சொந்தமான 5504.12 ஏக்கர் நிலம் கொண்ட கால குத்தகை அடிப்படையில் இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.  1978 ஆம் ஆண்டு வணிக உற்பத்தியினை தொடங்கிய இந்நிறுவனம் படிப்படியாக தனது உற்பத்தியினை விரிவாக்கம் செய்து வருகிறது.  முதலில் தொழிலக தர உப்பு உற்பத்தியை தொடங்கி, பின்னர் பலவகை செறிவூட்டப்பட்ட உப்பினை உற்பத்தி செய்து வருகின்றது.  இந்நிறுவனத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள 15 கிராமங்களைச் சேர்ந்த 1350 நபர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பும் மற்றும் 300 நபர்களுக்கு மறைமுக வேலை வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
 இந்நிறுவனம் 2016-17 ஆம் நிதியாண்டில் 2,18,450 டன் தொழிலக தரமுடைய உப்பினை உற்பத்தி செய்துள்ளது.  இந்நிறுவனம் உற்பத்தி செய்கின்ற இருவித (இரும்பு மற்றும் அயோடின்) செறிவூட்டப்பட்ட உப்பு, சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த தூள் உப்பு மற்றும் குறைந்த அளவு சோடியம் கொண்ட உப்பு ஆகியவற்றினை 'அம்மா உப்பு" என்ற பெயரில் 11.06.2014 அன்று முதல் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  அதனைத் தொடர்ந்து அம்மா உப்பு என்ற அதே பெயரில் அயோடின் கலந்த கல் உப்பினை வெளிச்சந்தையில் நவம்பர் 2014-இல் விற்பiனையினை துவங்கியது.  பொதுமக்கள் பயன்பெறும் பொருட்டு மேற்கூறிய உப்பு வகைகளை நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்வதற்காக பிப்ரவரி 2015-இல் இருந்து விநியோகம் செய்து வருகின்றது.  இத்திட்டம் துவங்கிய நாள் முதல் இதுவரை 49,314 டன் அம்மா உப்பு வெளிச்சந்தை மற்றும் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
 2012-2013ஆம் ஆண்டு தொழில் மானிய கோரிக்கையின் பொழுது தமிழ்நாடு உப்பு நிறுவனம் அதன் உப்பு விற்பனை அளவினை அதிகரித்திட உப்பு சுத்திகரிப்பு தொழிற்சாலையினை மாரியூர் வாலிநோக்கம் உப்பு கூட்டு திட்டத்தில் நிறுவும் என்ற அறிவிப்பிற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மற்றும் டாட்டா டிரஸ்ட் ஒருங்கிணைந்து ரூ.5.65 கோடி மதிப்பீட்டில் வாலிநோக்கம் உப்பு கூட்டு திட்டத்தின் கீழ் புதிதாக உப்பு சுத்திகரிப்பு தொழிற்சாலை அமைக்கப்பட்டு இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் இப்பகுதியில் உள்ள 150 நபர்களுக்கு நேரடியாகவும், 50 நபர்களுக்கு மறைமுகமாகவும் கூடுதலாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.  இதுதவிர, உப்பளத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மழைக்காலத்தில் இழப்பீட்டு உதவித்தொகை வழங்குவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மேலான கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால உதவித்தொகை வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 
 மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை பகுதியில் ரூ.150 கோடி மதிப்பில்  புதிதாக ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைப்பதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன.  இப்பணிகள் துவங்கப்பட்டு நிறைவேற்றப்படுவதன் மூலம்  இச் ஜவுளி பூங்காவில் 30 முன்னணி ஜவுளி நிறுவனங்கள் ரூ.450 கோடி மதிப்பில் முதலீடு செய்து ஜவுளி தொழிற்சாலை துவங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பினைப் பெருக்கி பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் விதமாக புதிய தொழிற்சாலை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு பேசினார்.
 இவ்விழாவில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் பேசியதாவது:-ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும், வேலைவாய்ப்பற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் விதமாகவும் வாலிநோக்கத்தில் தமிழ்நாடு உப்பு நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.  தற்போது தமிழ்நாடு அரசு மற்றும் டாடா டிரஸ்ட் ஒருங்கிணைந்து ரூ.5.65 கோடி மதிப்பில் புதிதாக உப்பு சுத்திகரிப்பு தொழிற்சாலை அமைக்கப்பட்டு இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் தொழிலக தர உப்பு , பலவகை செறிவூட்டப்பட்ட உப்பு என இரண்டு விதமாக ஆண்டொன்றிற்கு 40ஆயிரம் டன் அளவில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.  நாம் உட்கொள்ளும் உப்பு வகை அயோடின் குறைபாடு உள்ள உப்பு வகைகளை உட்கொள்வதன் மூலம் தைராய்டு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.  எனவே நுண்ணூட்டச்சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட உப்பினை பயன்படுத்திட வேண்டும். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பினை பெருக்கிடும் வகையில் புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் பயன்பெறும் வகையில் புதிதாக சட்டக்கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு பேசினார். 
 இவ்விழாவில்  டாடா டிரஸ்ட் செயல் தாளாளர் ஆர்.வெங்கடரமணன், முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பாண்டி, தமிழ்நாடு உப்புநிறுவன பொதுமேலாளர் கு.டில்லிகுமார், நிறுவன செயலாளர் தயானந்தன், மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முனியசாமி, ராம்கோ கூட்டுறவுத் தலைவர் செ.முருகேசன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பி.ஜெயஜோதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன், முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன், மாநில விவசாய பிரிவு கர்ணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் மோகன்தாஸ், உள்பட அரசு அலுவலர்கள், தமிழ்நாடு உப்பு நிறுவனத்தைச் சார்ந்த பணியாளர்கள்,  டாடா டிரஸ்ட் நிறுவனத்தைச் சார்ந்த பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago